சென்னை:
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்குரைஞர் ஜி. கிருஷ்ணமூர்த்தி இந்த ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார்.
அதில், சுவாதி கொலைக்கும் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை. தான் அப்பாவி. ஏழை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று ராம்குமார் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ராம்குமாரின் ஒப்புதல் இல்லாமலேயே ராம்குமார் சார்பில் ஜாமீன் மனுதாக்கல் செய்துள்ளார் ஜி.கிருஷ்ணமூர்த்தி என்று தெரியவந்திருக்கிறது. ராம்குமாரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஒப்புதலையும் ஜி.கிருஷ்ணமூர்த்தி பெறவில்லை.
இது குறித்து ராம்குமாரின் பெற்றோர்கள் வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள்.