டேரோடூன்: நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உத்தரகாண்ட் முதல்வர் ராவத், பெண்கள் ஜீன்ஸ் குறித்து பேசியது சர்ச்சையான நிலையில், தான்  ஜீன்ஸ் குறித்து பேசவில்லை என்றும்,  கிழிந்த ஜீன்ஸ் குறித்து மட்டுமே பேசினேன் என்று விளக்கம் தெரிவித்துள்ளார்.

“மக்கள் விரும்பும் ஆடைகளை அணிவதை நான் எதிர்க்கவில்லை,  எனக்கும் ஒரு மகள் இருக்கிறாள். ஆடை என்பது ஒரு தனிப்பட்ட தேர்வாக இருக்கும்போது, ​​மக்கள் தங்கள் கலாச்சாரத்தையும் மரபுகளையும் மதிக்க வேண்டும் என்றவவர்,  புடவையில் போரிட்ட ராணி லக்ஷ்மி பாய் போன்ற உதாரணங்கள் எங்களிடம் உள்ளன. ”கீழிந்த ஜீன்ஸ் அணிவது குறித்துதான் பேசினேன் என்றும் கூறியுள்ளார்.

உத்தரகண்ட் மாநில முதல்வர் தீரத் சிங் ராவத் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, பெண்கள் ஃபேஷன் என்கிற பெயரில் கிழிந்த ஜீன்ஸ் அணிகின்றனர், இன்றைய இளம் தலைமுறையினர் நாகரிகம் என்கிற பெயரில் கிழிந்த ஜீன்ஸ் அணிகிறார்கள்.  நான் ஒரு முறை விமானத்தில் சென்றபோது என் அருகே அமர்ந்திருந்த பெண் கை நிறைய வளையல், முழங்காலில் கிழிந்த ஜீன்ஸ், பூட்ஸ் அணிந்திருந்தார். அவருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தார்கள். தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தி வருவதாக கூறினார். கிழிந்த ஜீன்ஸுடன் சென்ற அவர் சமூகத்தில் என்ன மாதிரியான நல்ல தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று விமர்சித்திருந்தார்.

அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் ஏராளமான பெண்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் கிழிந்த ஜீன்ஸ் அணிந்து எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சனின் பேத்தி நவ்யா கூட கிழிந்த ஜீன்ஸ் அணிந்த புகைப்படத்தை வெளியிட்டுவிட்டு பின்னர் அதை நீக்கிவிட்டார்.  டிவிட்டரில் திரும்பும் பக்கம் எல்லாம் கிழிந்த ஜீன்ஸில் இருக்கும் பெண்களின் புகைப்படங்களாக இருக்கிறது .டிவிட்டரில் # ரிப்ஜீன்ஸ் ஹேஸ்டேக்கும் வைரலானது.

இந்த நிலையில், ராவத் தனது கருத்து குறித்து விளங்ககம் அளித்துள்ளார். ஒரு பெண்ணின் தந்தை என்ற முறையில், எனது கருத்தை தெரிவித்தாக கூறியவர்,  நான் சொன்ன நிகழ்வு பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பற்றியது. ஒரு மாணவர் ஐந்து முதல் ஆறு மணி நேரம் பள்ளியில் இருப்பதால், பெண்கள் பெரும்பாலான நேரத்தை வீட்டிலேயே செலவிடுவதால், மரபுகள் மற்றும் மதிப்புகளை வீட்டிலேயே சிறப்பாகப் பயிற்றுவிக்க முடியும் என்று நான் சொன்னேன்.

“மக்கள் விரும்பும் ஆடைகளை அணிவதை நான் எதிர்க்கவில்லை,  எனக்கும் ஒரு மகள் இருக்கிறாள். ஆடை என்பது ஒரு தனிப்பட்ட தேர்வாக இருக்கும்போது, ​​மக்கள் தங்கள் கலாச்சாரத்தையும் மரபுகளையும் மதிக்க வேண்டும் என்றவவர்,  புடவையில் போரிட்ட ராணி லக்ஷ்மி பாய் போன்ற உதாரணங்கள் எங்களிடம் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.