சென்னை: ஐசிஎஃப் ரயில்வே பணிக்கு வடமாநிலத்தவர்கள் விண்ணப்பிக்க அனுமதி இல்லை என தமிழகஅரசு அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் உள்ள ரயில்வே பணிகளை வடமாநிலத்தவர்களே ஆக்கிரமித்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள மத்தியஅரசு பணிகளிலும், மண்ணின் மைந்தர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என தமிழக மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், மத்தியஅரசு மாற்றான்தாய் போக்கில் செயல்பட்டு வருகிறது. இதை தடுக்கும் வகையில், ஸ்டாலின் தலைமையிலான தமிழகஅரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, சென்னையில் உள்ள ஐசிஎஃப் ரெயில்பெட்டி தொழிற்சாலை பணிக்கு விண்ணப்பிக்க வட மாநிலத்தவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், சென்னை பெரம்பூர் ஐசிஎஃப் ரயில்வே நிர்வாகம் சார்பில், ரெயில்பெட்டி தொழிற்சாலையில், அப்ரண்டீஸ் பணிக்காக விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு கடந்த 20ந்தேதி வெளியானது. அதன்படி 510 பதவிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. இந்த பணிகளுக்கு தமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகஅரசின் நடவடிக்கை காரணமாக, ரெயில்வே நிர்வாகம் இவ்வாறு அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.