நாக்பூர் :

ருவநிலை மாறுபாடால் அடுத்த 5 நாட்கள் கடுமையான வெப்பம் சுட்டெரிக்கும் என்றும்,  பொது மக்களே பகல் நேரங்களில் வெளியே செல்வதை தவிர்க்கும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அதிக அளவு நீர் அருந்தும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.

பருவநிலை மாறுபாடு காரணமாக இந்தியாவை கொடிய வெப்பம் தாக்கும் என அரசுகளுக்கிடை யேயான பருவநிலை மாற்ற குழு எச்சரித்து உள்ளது. அதன்படி,  உலகின் வெப்பநிலை மேலும்  2 டிகிரி செல்சியஸ் அதிகரித்தால் அதனால் கடும் விளைவுகள் ஏற்படும் என்றும், பலர் உயிரிழக்க நேரிடும் என்றும் அதிர்ச்சியூட்டும் தகவலையும் தெரிவித்து உள்ளது.

மேலும் 2030 முதல் 2052 ம் ஆண்டிற்குள் புவி வெப்பமயமாதல் 1.5 டிகிரி செல்சியஸ் அளவிற்கு அதிகரிக்கும். இதனால் உலகின் சராசரி வெப்பநிலை அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ள ஆய்வு நிறுவனம்,  இந்திய துணைகண்டத்தில் கோல்கட்டா மற்றும் பாகிஸ்தானின் கராச்சி ஆகிய நகரங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்றும் தெரிவித்து உள்ளது.

இந்த பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதலால்  இந்தியா, பாகிஸ்தான் மோசமாக பாதிக்கப்படும். வெப்பம் அதிகரிப்பதால் விளைச்சல் பாதிக்கப்பட்டு உணவு தட்டுப்பாடு ஏற்படும்.
உணவு பொருட்கள் விலை உயர்வு, வருவாய் இழப்பு, வாழ்வாதார இழப்பு, உடல்நிலை பாதிப்புக்கள் ஏற்படும் என்றும்,  ஆசியாவில் அரிசி, கோதுமை, தானிய வகைகள் உள்ளிட்டவை களின் உற்பத்தி குறையும்.

கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவின் அனல் மின் சக்தி துறையில் மட்டும் 929 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடு வெளியிடப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டி உள்ளது.

இந்தியா முழுவதும் நல்ல வெயில் இருப்பது வழக்கம்தான் என்றாலும் கடந்த 2015ம் ஆண்டு,  இந்தியா முழுவதுமே வழக்கத்தைவிட அதிகமான அளவில் வெயில் சுட்டெரித்தது. வட இந்தியா வின் பெரும் பகுதியில் 40 டிகிரி செல்சியஸிற்கு அதிகமாக வெப்பம் நிலவியது. இந்த வெப்பம் காரணமாக ஏராளமானோர் பலியானதும் தெரிந்ததே.

அதுபோல கடுமையான வெப்பம் மீண்டும் இந்தியாவை பாதிக்க இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப் பட்டு உள்ளது.  அடுத்த 5 நாட்களில் ஈக்வினாக்ஸ் நிகழ்வு நம்மை பாதிக்கும் என்றும், இந்த நாட்களில், வெளியில் செல்வதை தவிர்க்கும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த கடும் வெப்பத்திற்கு மனிதர்கள் மட்டுமின்றி வன விலங்குகள், பறவைகளும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை இருப்பதால், வளர்ப்பு பிரானிகளை வெயில் தாக்காதாவது பராமரிக்கும் படியும்,  குறிப்பாக பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியே வராமல் பாதுகாப்பாக இருக்கும் படியும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ஈக்வினாக்ஸ் நிகழ்வின்போது,  வெப்பநிலை மாறுபடும் அல்லது 40 டிகிரி செல்சியஸ் அடைய லாம் இதனால், நீர்ச்சத்து குறையும் என்பதால், அதிக அளவு நீர் எடுத்துக்கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த கடுமையான வெப்பம் ஏற்படும் நாட்களில்,  அனைவரும் ஒவ்வொரு நாளும் கட்டாயம் 3லிட்டர் நீர் அருந்த வேண்டும்… வயதானவர்கள் ரத்த அழுத்தத்தை அடிக்கடி கண்காணிக்கும் படியும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

முடிந்தவரை குளிர்ந்த நீரில் குளிக்கும்படியும், நீர்ச்சத்து உள்ள பழங்கள் அதிக சாப்பிடவும் எப்பொழுதும் உதடுகளையும், கண்மணிகளையும் ஈரப்பதமாக வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.