சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமனை இன்றுடன் விலகும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. இது மார்கழியுடன் முடிவடைவது வழக்கம். நடப்பாண்டில் வடகிழக்கு பருவ மழையின்போது கொட்டித்தீர்த்த கனமழையால் தமிழ்நாடு முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது.குறிப்பாக சென்னை கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டது. மக்கள் போதும் போதும் என்ற அளவுக்கு மழை கொட்டி தீர்த்தது. இது வழக்கத்தைவிட 59 சதவீதம் அதிகம். சென்னையில் வழக்கத்தைவிட 74 சதவீதம் அதிகம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் அதை ஒட்டிய கடலோரஆந்திரா, தெற்கு ஆந்திரா, தெற்குஉள் கர்நாடகா, கேரளா பகுதிகளில் இருந்து வடகிழக்கு பருவமழை ஜன.22-ம் தேதி (இன்று) விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
இதன் காரணமாக வரும் 25-ம் தேதி வரையிலான 4 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று தெரிவத்துள்ளார்.
[youtube-feed feed=1]