சியோல்:
ட கொரியா விரைவில் தனது முதல் பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலை அறிமுகம் செய்யும் என்று தென்கொரியா தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியான செய்தியில், 3,000 டன் எடை கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல் கட்டும் பணியை வட கொரியா முடித்துவிட்டதாக தென் கொரிய மற்றும் அமெரிக்கா உளவுத்துறை சந்தேகிக்கிறது என்றும், சரியான நேரத்தில் அதை வெளிபடுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வட கொரியா நீரில் மூழ்கக்கூடிய ஏவுகணை சோதனைப் பெட்டியை ஒரு புதிய நிலைக்கு நகர்த்தியதாகக் கூறிய, ஒரு அமெரிக்க நிபுணர்கள் குழுவிலிருந்து இந்த செய்தி வந்துள்ளது என்றும், இது நடக்கவிருக்கும் நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணை ஏவுகணை சோதனையைப் பற்றி சுட்டிக்காட்டுகிறது என்றும் அந்த செய்தியில் குறிப்பிடபட்டுள்ளது.