கலிபோர்னியா:
ஃபேஸ்புக் தலைமை செயல் அதிகாரியும், இணை நிறுவனருமான மார்க் ஜுக்கர்பெர்கின் பாதுகாப்பிற்காக கடந்த 2020-ஆம் ஆண்டில் மட்டுமே அமெரிக்க டாலர்களில் சுமார் 23 மில்லியனை செலவு செய்துள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி சுமார் 13.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மார்க் ஜூக்கர்பெர்கின் தனிப்பட்ட மற்றும் அவர் குடியுள்ள வீட்டின் பாதுகாப்பிற்காக செலவு செய்துள்ளதாம். அதோடு கூடுதலாக 10 மில்லியன் அமெரிக்க டாலர்களும் பாதுகாப்பிற்காக செலவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது அந்நிறுவனம்.

கொரோனா பொதுமுடக்கம், அமெரிக்க அதிபர் தேர்தல் என பலவித காரணத்தினால் பாதுக்காப்பு செலவுகள் கூடி உள்ளதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. மார்க் ஜூக்கர்பெர்க் உலகம் அறிந்த முகம் என்பதால்தான் இந்த ஏற்பாடு எனவும் ஃபேஸ்புக் சொல்லியுள்ளது.