டெல்லி: ரயில்பெட்டிகளில், பயணிகள் பான்பராக் மற்றும் புகையிலை போட்டுவிட்டு துப்பும் எச்சிலை அகற்ற ஆண்டு ரூ.1200 கோடி ரூபாய் அளவுக்கு செலவழிப்பதாக ரயில்வே அறிவித்துள்ளது.

வடமாநிலத்தவர்கள், பெரும்பாலோர் பான், குட்கா, வெற்றிலை மற்றும் புகையிலை போடும் வழக்கம் கொண்டவர்கள். இவர்கள் ரயில் பயணிகளின்போது, புகையிலைப் போட்டுக்கொண்டு, ரயில்பெட்டிகளின் இடுக்குகளில் புளிச் புளிச்சென்று எச்சில் துப்புவதையும், பல கட்டிங்களின் படிக்கட்டு களிலும் எச்சில் கறைகளை  பார்த்திருப்போம். இதுபோன்ற செயல்களை செய்யக்கூடாது என மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வந்தாலும், கடுமையான நடவடிக்கை இல்லாததால், பயணிகளும், எச்சில் துப்பும் பணிகளை தொடர்ந்துகொண்டேதான் உள்ளனர். இந்த விவகாரத்தில் படித்தவன், படிக்காதவன் என்ற வேறுபாடு இல்லாமல்தான் பொதுஇடங்களில் புளிச், புளிச் துப்பிக்கொண்டுதான் உள்ளனர்.

இதுபோன்ற சாமானியர்களின் சுகாதாரமற்ற நடவடிக்கை காரணமாக, ரயில்பெட்டிகளில் ஏற்பட்டுள்ள கறையை போக்க  ஆண்டுக்கு 1,200 கோடி ரூபாய் செலவு செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.  இது தவிர பல கோடி லிட்டர் தண்ணீரும் தேவைப்படுவதாகவும் தெரிவித்து உள்ளது.

இந்த முறையற்ற செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்தியன் ரயில்வே புதிய தீர்வு ஒன்றை கொண்டு வந்துள்ளது. அதாவது, கையளவில் உள்ள பிரத்யேக காகித பாக்கெட்டுகளை ரயில் நிலையங்களில் விற்பனை செய்ய முன்வந்துள்ளது.

குட்கா, பான் மசாலா, புகை மற்றும் வெற்றிலை எச்சில் துப்பும் பழக்கம் உள்ளவர்கள், இந்த காகி பாகெட்டுகளை வாங்கி, அதில்  துப்பிவிட்டு, அதை குப்பை தொட்டியில் போட்டுவிட அறிவுறுத்தி உள்ளது. இதனால், சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பு இல்லை என கூறப்படுகிறது.

இந்த பாக்கெட்டின் விலை  ரூ.5 முதல் 10 ரூபாய்க்குள் விற்பனை செய்ய உள்ளதாகவும், 3 வடிவங்களில் காகித பைகளை விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த பை விற்பனை செய்யும் திட்டம், முதற்கட்டமாக வதற்கு மேற்கு மத்திய ரயில்வே மண்டலங்களில் 42 ரயில் நிலையங்களில் இயந்திரங்கள் மூலம் விற்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் வெற்றி கிடைக்கும் பட்சத்தில் பிற ரயில் நிலையங்களுக்கும் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் கூறப்படுகிறது.