சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வடசென்னை பகுதிகளை ஆய்வு செய்தார்.
வடகிழக்கு பருவ மழை முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கடந்த 24ந்தேதி நடைபெற்றது. இதில், மூத்த அமைச்சர்கள், தலைமை செயலாளர் இறையன்பு, பல்வேறு துறை செயலாளர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள் கலந்துக்கொண்டனர். அப்போது, வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து துறைகளும் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மாவட்ட கலெக்டர் களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
அதைத்தொடர்ந்து சென்னையில் எடுக்கப்பட்டு வரும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.ஏற்கனவே தென்சென்னை, மத்திய சென்னை பகுதிகளில் ஆய்வு நடத்திய முதல்வர், இன்று வடசென்னை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர்நிலைகள் மற்றும் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.