சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பருவமழை தீவிரமடைந்து உள்ளதாகவும், கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலம் முடிவடைந்த நிலையில்,  வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர்  மாதம் இறுதியில் தொடங்கியது. இதையடுத்து அவ்வப்போது மழை பெய்து வருகிறது.  இடையில் இரண்டு புயல் உருவாகிய நிலையில், அது வலுவிலந்தது. இதனால், இனிமேல் உருவாகும் புயல் கடும் மழையை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கோவை , நீலகிரி, தென்காசி, நெல்லை  மற்றும் கடலோர மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் அந்த பகுதிகளில் உள்ள குளம் குட்டைகளில் தண்ணீர் அதிகரித்து வருகிறது.  . சென்னை மற்றும் புறநகர் பகுதியிலும் ஒரு சில பகுதிகளில்  அவ்வப்போது லேசான மழை பெய்கிறது.

இந்த நிலையில் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலில், இலங்கை மற்றும் அதனையொட்டி உள்ள பகுதிகளில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று  தெரிவித்துள்ளது.

அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இன்று இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும். நாளை (நவம்பர் 3-ந் தேதி) முதல் 6-ந்தேதி வரை கனமழை பெய்யக் கூடும் .

குறிப்பாக தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை, மற்றும் தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

அடுத்து வருகின்ற 4 நாட்களும் தமிழகத்தில ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.