சென்னை: வடசென்னையின் அடையாளங்களில் ஒன்றாக, தண்டையார் பேட்டை மணிகூண்டு அருகே கடந்த 2 தலைமுறையாக செயல்பட்டு வந்த அகஸ்தியா தியேட்டர் சென்னை மக்களிடம் இருந்து விடைபெற்றது. இந்த தியேட்டரின் கடைசி நாளாக டிசம்பர் 1ந்தேதி இருந்தது. நேற்று (டிசம்பர் 2ந்தேதி) முதல் கட்டிடம் இடிக்கும்படி நடைபெற்று வருகிறது. இது வடசென்னை சினிமா ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
‘அகஸ்தியா தியேட்டர்’, 1967-ம் ஆண்டு தண்டையார்பேட்டை-திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மணிக்கூண்டு அருகே கட்டி திறக்கப்பட்டது. வடசென்னை பகுதியில் முதல் முதலில் 70 எம்.எம். திரையுடன் அமைக்கப்பட்ட தியேட்டர் இதுதான். இந்த தியேட்டரில் முதல்முதலாக திரையிடப்பட்ட படம், கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘பாமா விஜயம்’ படம் திரையிடப்பட்டது. தினசரி 4 காட்சிகள் திரையிடப்பட்டு வந்தது. அப்போது ஒரு டிக்கெட்டின் விலை குறைந்த பட்சம் 45 பைசா. பின்ன்ர சேர் சோபா என அதிகபட்சமாக 2இரண்டு ரூபாய் வரை இருந்ததாக கூறப்படுகிறது.
சென்னையில் அன்றைய காலகட்டத்தில் பிரபலமாயிருந்த திரையரங்குகள், மயிலாப்பூர் காமதேனு, தி.நகர் கிருஷ்ணவேணி, மவுன்ட்ரோடு பகுதியில் உள்ள சித்ரா, கெயிட்டி, காசினோ, பிளாசா, பைலட், அலங்கார், வெலிங்டன்,. மினர்வா, ஸ்ரீகிருஷ்ணா, செலக்ட், க்ரவுன், புரசைவாக்கம், புவனேஸ்வரி, பாரத், பிரபாத், பிராட்வே, எலிகண்ட், நட்ராஜ், பத்மனாபா, மகாலஷ்மி, சரஸ்வதி, முருகன் டாக்கீஸ், ராக்ஸி, வீனஸ், சயானி, மேகலா, உமா ராக்ஸி, சரவணா, பாலாஜி, சரஸ்வதி, லட்சுமி, அலங்கார், சபையர், ஆனந்த் போன்றவை.
இந்த தியேட்டர்களில் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெயசங்கர், ரவிசந்திரன், கமல், ரஜினியின் ஆரம்ப காலங்கள் வரை இந்தத் திரையரங்குகள் படு பிஸியாக இருந்தவைதான். இதில் மேகலா, சரவணா, சித்ரா, வெலிங்டன், பிராட்வே திரையரங்குகள் எம்.ஜி.ஆர் படங்களை ரிலீஸ் செய்யும். சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி தியேட்டர்கள் எப்போதும் சிவாஜி திரைப்படங்களை வெளியிடும். வெகு சில நேரங்களில் மட்டும்தான் இது மாறும்.
ஆனால், கால ஓட்டத்தின் காரணமாக உலகம் முழுவதும் ஏற்பட்ட இயந்திர மயமாக்கம், நவீமயமாக்கம், டிஜிட்டல் தொழில் நுட்பம் போன்ற வசதிகளால் தியேட்டர்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. 1970களின் மத்தியில் சென்னையில் பல இடங்களில் உள்ள தியேட்டர்களில் மாற்றங்கள் செய்யும் பணி தொடங்கியது. இதனால் தியேட்டர் ஸ்கிரின் பெரியதானது மற்றும் தியேட்டர்களில் ஆங்காங்கே ஸ்டியோ சவுண்டு பாக்ஸ் வைத்து, படம் பார்க்க வருவோரை மிரள வைத்தது. இதனால் சாதராணமாக தியேட்டர்களின் மவுசு மடிப்படியாக குறையத்தொடங்கியது.
இதில் பெரும்பாலான தியேட்டர்கள் இப்போது ஷாப்பிங்க் காம்ப்ளெக்fளாக மாற்றப்பட்டு உள்ளன. வடசென்னையின் ஓட்டேரி பகுதியில வீட்டைச் சுற்றி தியேட்டர்கள்தான். சரஸ்வதி (இ), மகாலட்சுமி, புவனேஸ்வரி (இ), வசந்தி (இ), ராக்ஸி (இ), மேகலா (இ), உமா (இ). இ என குறிப்பிடப்பட்டவை எதுவும் இப்போது இல்லை. பலவும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஆகிவிட்டன. அயனாவரத்தில் இருந்த சயானி திரையரங்கும் அடுக்குமாடி குடியிருப்பாகிவிட்டது. சென்னை புரசைவாக்கத்தில் இருந்த ராக்ஸி இப்போது சரவணா ஸ்டோர்ஸ் துணிக்கடை ஆகிவிட்டது.
சென்னையை அலங்கரித்த இந்த கலைக் கூடங்களில் இப்போது 90 சதவிகித தியேட்டர்கள் உயிருடன் இல்லை. இதில் தப்பி தவறி இருந்து வரும் ஒருசில தியேட்டர்களும் தற்போது இடிக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக தண்டையார்பேட்டை மணிக்கூண்டு அருகே இரு தலைமுறைகளை கடந்து, வடசென்னை மக்களின் பொழுதுபோக்கு புகழிடமாக திகந்த அகஸ்தியா தியேட்டர் இடிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே வடசென்னை மெட்ரோ ரயில் பணிக்காக கடந்த 2015ம் ஆண்டுபு தியேட்டரின் முன்பகுதி இடிக்கப்பட்டது. இதனால் அங்கு படம் பார்க்க வருபவர்கள், வாகன நிறுத்த தேவயைன வசதி இல்லை நிலை உருவானது. இதனால், அங்கு படம் பார்க்க வரும் ரசிகர்களின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியது. இதனால் கடும் இழப்பு ஏற்பட்டதால், தியேட்டரை மூடும் நிலைக்கு நிர்வாகம் வந்தது. இதனால், தியேட்டரை நிரந்தரமாக மூட நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி கடந்த 2 ஆண்டுகளாக காட்சிகள் நிறுத்தப்பட்டு தியேட்டர் மூடியே கிடந்தது. அகஸ்தியா தியேட்டரில் கடைசியாக டிக்கெட் விலை முதல் வகுப்பு சுமார் 30 ரூபாயும், கடைசி வகுப்பு 3 ரூபாய் எனவும் இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது இந்த தியேட்டர் விற்பனை செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து, தற்போது, தியேட்டர் இடிக்கப்பட்டு வருகிறது.
சென்னையின் அடையாளமாக விளங்கிய அகஸ்தியா தியேட்டர், பொக்லைன் இயந்திரம் மூலம் தற்போது இடிக்கும்பணி நடைபெற்று வருகிறது. தனது தோற்றத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வரும் அகஸ்தியே தியேட்டர் இன்னும் ஒரிரு நாளில் தனது முழுமையாக தோற்றத்தை மறந்துவிடும்…