டெல்லி:

நாடு முழுவதும் சமையல் எரிவாயு விலை ரூ.60 முதல் ரூ.65 வரை குறைக்கப்பட்டு உள்ளது. சர்வதேச சந்தையில் எல்பிஜி-யின் விலை குறைந்து வருவதைத் தொடர்ந்து, இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டு தலா 12 சிலிண்டர்கள் மானியத்துடன் அரசு வழங்கி வருகிறது. இந்த சிலண்டர் விலை சர்வதேச சந்தையை பொறுப்பு எல்.பி. நிறுவனங்கள் மாற்றி வருகின்றன. தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு உள்ளது.

அதன்படி,  மானியமில்லா எல்பிஜி (LPG) சிலிண்டர்கள் விலை 61.5 முதல் 65 ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டாவது மாதமாக எல்பிஜி சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு உள்ளது.

டெல்லியில் 14.2 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டரின் விலை 61.5 ரூபாயும், மும்பையில் 62 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இந்த எல்பிஜி சிலிண்டரின் விலை 64.5 ரூபாய் குறைந்துள்ளது.

ஏப்ரல் 1 ஆம் தேதியான இன்று முதல் இந்த விலைக் குறைப்பு அமலுக்கு வருகிறது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அன்னியச் செலவாணி, சர்வதேச சந்தையில் எல்பிஜி-யின் விலை உள்ளிட்டவைகளைப் பொறுத்து மானியத்தில் மாற்றம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.