சென்னை: சென்னை பாரிமுனை ஜார்ஜ் டவுன் பகு​தி​யில் உள்ள சாலை​யோர ஆக்​கிரமிப்​பு​களை  அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும், அதன்மீது  நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் அரசு அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவினை மதிக்காத போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பல முறை அரசுக்கு சுட்டிக்காட்டி உள்ளது. இருந்தாலும், நீதியை அவமதிக்கும்போக்கு அதிகரித்து வருகிறது. அரசு அதிகாரிகள் நீதிமன்ற தீர்ப்பினை செயல்படுத்துவதில் மெத்தனம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில,   ஜார்ஜ் டவுன் பகு​தி​யில் உள்ள சாலை​யோர ஆக்​கிரமிப்​பு​களை அகற்​றாத விவ​காரத்​தி்ல் நீதி​மன்ற உத்​தரவை அமல்​படுத்​தாத மாநக​ராட்சி மற்​றும் காவல்​துறை அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழக நகராட்சி நிர்​வாகத்​துறை செயலர் மற்​றும் டிஜிபிக்கு  உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் உத்தரவிட்டு உள்ளனர்.

 அரசின் துறை​களுக்கு இடையே ஒரு​மித்த எண்​ணம் இல்லை என்​றால் பொது​மக்​களுக்​குத்​தான் பாதிப்பு என குற்​றம் சாட்டியதுடன், அரசை கடுமையாக விமர்சித்த நீதிபதிகள்  விசா​ரணையை தள்ளி வைத்​துள்​ளனர்.

சென்னை ஜார்ஜ் டவுன் பகு​தி​யில் தனக்கு சொந்​த​மான நிலத்​தில் வீடு கட்ட பிரமிளா என்​பவர் சிஎம்​டிஏ-​விடம் இரு​முறை தி்ட்ட அங்​கீ​காரம் பெற்​றும் அந்த இடத்​துக்கு செல்​லும் பாதையை சிலர் ஆக்​கிரமித்து இருந்​த​தால் வீட்டை கட்​ட​முடிய​வில்லை எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார். அந்த வழக்கை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், வீட்​டுக்கு செல்​லும் பாதை​யில் உள்ள ஆக்​கிரமிப்​பு​களை அகற்ற அதி​காரி​களுக்கு உத்​தர​விட்​டது. ஆனால், அதிகாரிகள் எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்லை என கூறி உயர் நீதி​மன்​றத்​தில் பிரமிளா அவம​திப்பு வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

இந்த வழக்கு விசா​ரணை நீதிப​தி​கள் எஸ்​.எம்​.சுப்​ரமணி​யம், சி.குமரப்​பன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது மனு​தா​ரர் தரப்​பில் வழக்​கறிஞர் விஜயன் சுப்​ரமணி​யன் ஆஜராகி, ‘‘கடந்த 2012-ம் ஆண்டே திட்ட அனு​மதி பெற்று காலா​வ​தி​யாகி விட்​டது. மீண்​டும் திட்ட அனு​மதி பெற்​றும் சாலை ஆக்​கிரமிப்பு காரண​மாக இது​வரை வீட்டை கட்ட முடிய​வில்​லை.

ஆக்​கிரமிப்​பு​களை அகற்​றும் விவ​காரத்​தில் சென்னை மாநக​ராட்சி மற்​றும் போலீ​ஸார் எந்த ஒத்​துழைப்​பும் வழங்​க​வில்​லை. சாலையை ஆக்​கிரமித்​துள்​ளவர்​களின் வீடு​களுக்கு வழங்​கப்​பட்​டுள்ள மின்​இணைப்பை துண்​டிக்​கும்​படி உயர் நீதிமன்​றம் உத்​தர​விட்​டும் அந்த உத்​தர​வை​யும் அதிகாரிகள் மதிக்​க​வில்​லை’’ என குற்​றம் சாட்​டி​னார்.

அப்​போது மாநக​ராட்சி தரப்​பில், இந்த பகு​தி​யில் உள்ள ஆக்​கிரமிப்​பு​களை அகற்ற பாது​காப்பு கோரி போலீ​ஸாருக்கு 4 முறை கடிதம் எழு​தி​யும் எந்த பதி​லும் இல்​லை. போலீ​ஸார் பாது​காப்பு அளித்​தால் மட்​டுமே ஆக்​கிரமிப்​பு​களை அகற்ற முடி​யும், என தெரிவிக்​கப்​பட்​டது.

அதற்கு காவல்​துறை தரப்​பில், மாநக​ராட்சி எழு​திய கடிதங்​களில் எந்த தேதி​யில் ஆக்​கிரமிப்​பு​களை அகற்ற வேண்​டும். எவ்​வளவு போலீ​ஸார் பாது​காப்பு அளிக்க வேண்​டுமென எந்த விவர​மும் தெரிவிக்​கப்​படவில்​லை, என தெரிவிக்​கப்​பட்​டது.

மாநக​ராட்சி மற்​றும் காவல்​துறை தரப்பு வாதங்​களால் கோபமடைந்த நீதிப​தி​கள், ‘‘தமிழக அரசின் கட்​டு்ப்​பாட்​டின்​கீழ் உள்ள துறை​களுக்கு இடையே நீதி​மன்ற உத்​தரவை அமல்​படுத்​தும் விஷ​யத்​தில் ஒரு​மித்த எண்​ணம் இல்​லை. இப்​படி அதிகாரிகள் தங்​களுக்​குள் ஒரு​வர் மீது ஒரு​வர் பழிசுமத்தி நாட்​களை கடத்​தி​னால் பாதிப்பு பொது​ மக்​களுக்​குத்​தான். இது​போன்ற அதி​காரி​களின் செயல்​பாட்டை ஒரு​போதும் ஏற்க முடி​யாது.

ஆக்​கிரமிப்​பு​களை அகற்ற வேண்​டுமென உயர் நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தரவை வேண்​டுமென்றே அவம​தித்த மாநக​ராட்சி மற்​றும் காவல்​துறை அதிகாரிகள் மீது தமிழக அரசு உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

இது​போல, அதி​காரி​களுக்​கிடையே ஒருங்​கிணைப்பு இல்​லாததை பல வழக்​கு​களில் பார்த்து விட்​டோம். அதனால்​தான் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​கு​களின் எண்​ணிக்​கை​யும் அதி​கரித்து வரு​கிறது. பொது​மக்​களுக்​கும் உயர் நீதி​மன்​றம் மீதான நம்​பிக்கை குறைந்து வரு​கிறது. எனவே, இந்த வழக்​கில் நகராட்சி நிர்​வாகத்​துறை செயலர் மற்​றும் தமிழக அரசின் டிஜிபி ஆகியோரை தாமாக முன்​வந்து எதிர்​மனு​தா​ரர்​களாக சேர்க்​கிறோம். அவர்​களாவது இந்த சாலை ஆக்​கிரமிப்​பு​களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

அதே​போல காலம் தாழ்த்​திய அதிகாரிகள் மீதும் துறை ரீதி​யாக நடவடிக்கை எடுக்க வேண்​டும். இந்த வழக்​கில் எடுக்​கப்​பட்ட நடவடிக்கை குறித்து வரும் ஜன.5-ம் தேதி இரு​வரும்​ அறிக்​கை தாக்​கல்​ செய்​யவேண்​டும்​ என உத்​தர​வி்ட்​டு வி​சா​ரணை​யை தள்​ளி வைத்​துள்​ளனர்​.

[youtube-feed feed=1]