சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (30-ம் தேதி) காலை 11 மணிக்கு தொடங்கி ஏப்.6-ம் தேதி வரை நடக்கிறது. சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அந்த தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் ஆளும் தி.மு.க. அரசின் பதவிக்காலம் மே மாதம் 10ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய ஆட்சி அமையும் வகையில், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15ந்தேதி அன்று மாலை அறிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி, ஏப்ரல் 23ம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொடர்ந்து மே 4ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் இந்த முறை 5 முனை போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், வேட்பாளர்களை களமிறக்கி தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இதன் காரணமாக தமிழ்நாடு அரசியல் களம் தகிக்கத் தொடங்கி உள்ளது.
இந்த பரபரப்பான சூழலில் இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கி உள்ளது. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 30, 2026 முதல் தொடங்கி ஏப்ரல் 6 வரை (அரசு விடுமுறை நாட்கள் தவிர) நடைபெறும். காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்படும். ஏப்ரல் 7-ல் மனுக்கள் பரிசீலனை (Scrutiny) யும், ஏப்ரல் 9ந்தேதி வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளாகும். அன்றைய தினம் மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும். இதையடுத்து வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4ந்தேதி நடைபெறுகிறது.
வேட்புமனு தாக்கல் செய்ய மொத்தமே 8 நாட்கள் உள்ள நிலையில், அதில் 4 நாட்கள் பொதுவிடுமுறை வருவதால், 4 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது.
இன்று வேட்புமனு தொடங்கும் நிலையில்‘ 31-03-26, 01-04-26, 03-04-26, 05-04-26 என 4 நாட்கள் விடுமுறை தினமாக உள்ளது. இதனால் வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய இன்று 30-03-26 மற்றும் ஏப்ரல் 2ந்தேதி வியாழக்கிழமை, மற்றும் , ஏப்ரல் 4ந்தேதி (04-04-26) சனிக்கிழமை மற்றும் ஏப்ரல் 6ந்திதி (திங்கட்கிழமை) ஆகிய 4 நாட்கள் மட்டுமே உள்ளது\.
இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவிப்பு
வேட்பாளர்கள் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தங்கள் தொகுதிக்குட்பட்ட கோட்டாட்சியர் அல்லது வட்டாட்சியர் அலுவலகங்களில் மனுதாக்கல் செய்யலாம். மனுத்தாக்கல் செய்ய வரும் வேட்பாளருடன் நான்கு பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். மேலும் அலுவலகத்திற்குள் நூறு மீட்டர் தூரத்தில் மூன்று வாகனங்கள் மட்டும் நிறுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் வேட்பாளர்கள் வைப்பு தொகையாக பொது பிரிவின ரூபாய் 10 ஆயிரம் மற்றும் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியின ரூபாய் 5000 பணமாக செலுத்த வேண்டும். இவை காசோலை அல்லது வங்கி வரைவோலை ஏற்கப்படாது அனைத்து வேட்பாளர்களும் தேர்தல் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
இதையடுத்து மாநிலம் முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்யும் பணிகள் தொடங்கி உள்ளன.
சென்னையில் வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்கள் விவரம்:
ஆர்.கே.நகர் தொகுதிக்கு டி.எச்.சாலையில் உள்ள தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும், தேர்தல் நடத்தும் அலுவலராக பி. பூங்கொடி உள்ளார், 8925960711 என்ற எண்ணில் அந்த தொகுதியில் தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகாரளிக்கலாம்.
பெரம்பூர் தொகுதிக்கு வியாசர்பாடி, எருக்கஞ்சேரி உயர் சாலையில் டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியில் தாக்கல் செய்ய வேண்டும், தேர்தல் நடத்தும் அலுவலராக எஸ். கீதா உள்ளார், 8925960712 என்ற எண்ணில் அந்த தொகுதியில் தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகாரளிக்கலாம்.
கொளத்தூர் தொகுதிக்கு செம்பியம், பேப்பர் மில்ஸ் சாலையில் ஒருங்கிணைந்த சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும், தேர்தல் நடத்தும் அலுவலராக எஸ். சாந்தி உள்ளார், 8925960713 என்ற எண்ணில் அந்த தொகுதியில் தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகாரளிக்கலாம்.
வில்லிவாக்கம் தொகுதிக்கு வில்லிவாக்கம், 4வது பிரதான சாலை, சிட்கோ நகரில் உள்ள சமுதாயக் கூடத்தில் தாக்கல் செய்ய வேண்டும், தேர்தல் நடத்தும் அலுவலராக எல். மைதிலி உள்ளார், 8925960714 என்ற எண்ணில் அந்த தொகுதியில் தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகாரளிக்கலாம்.
திரு.வி.க நகர் தொகுதிக்கு பட்டாளம், ஸ்ட்ரஹான்ஸ் சாலையில் உள்ள திரு.வி.க நகர் மண்டல அலுவலகததில் தாக்கல் செய்ய வேண்டும், தேர்தல் நடத்தும் அலுவலராக எஸ். பால் பிரின்சி ராஜ்குமார் உள்ளார், 8925960715 என்ற எண்ணில் அந்த தொகுதியில் தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகாரளிக்கலாம்.
எழும்பூர் தொகுதிக்கு சேத்துப்பட்டு மேயர் ராமநாதன் சாலையில் உள்ள எழும்பூர் வட்டாட்சியர்அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலராக என். சுரேஷ் உள்ளார், 8925960716 என்ற எண்ணில் அந்த தொகுதியில் தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகாரளிக்கலாம்.
ராயபுரம் தொகுதிக்கு பேசின் பிரிட்ஜ் சாலையில் உள்ள ராயபுரம் மண்டல அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும், தேர்தல் நடத்தும் அலுவலராக ஆர். பன்னீர்செல்வம் உள்ளார், 8925960717 என்ற எண்ணில் அந்த தொகுதியில் தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகாரளிக்கலாம்.
துறைமுகம் தொகுதிக்கு பிராட்வே பிரகாசம் சாலையில் உள்ள பாரதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் தாக்கல் செய்ய வேண்டும், தேர்தல் நடத்தும் அலுவலராக டி. பரிதா பானு உள்ளார், 8925960718 என்ற எண்ணில் அந்த தொகுதியில் தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகாரளிக்கலாம்.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிக்கு திருவல்லிக்கேணி டாக்டர். பெசன்ட் சாலையில் உள்ள சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பல்நோக்கு மைய கட்டிடத்தில் தாக்கல் செய்ய வேண்டும், தேர்தல் நடத்தும் அலுவலராக ஆர். சுகந்தி உள்ளார், 8925960719 என்ற எண்ணில் அந்த தொகுதியில் தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகாரளிக்கலாம்.
ஆயிரம் விளக்கு தொகுதிக்கு நுங்கம்பாக்கம் ஏரிப்பகுதி, 4-வது குறுக்குத் தெருவில் உள்ள தேனாம் பேட்டை மண்டல அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும், தேர்தல் நடத்தும் அலுவலராக ஐ. வளர்மதி உள்ளார். 8925960720 என்ற எண்ணில் அந்த தொகுதியில் தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகாரளிக்கலாம்.
அண்ணா நகர் தொகுதிக்கு ஷெனாய் நகர் புல்லா அவென்யூ, 2வது குறுக்குத் தெருவில் உள்ள அண்ணாநகர் மண்டல அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும், தேர்தல் நடத்தும் அலுவலராக பி.எம்.செந்தில் குமார் உள்ளார், 8925960721 என்ற எண்ணில் அந்த தொகுதியில் தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகாரளிக்கலாம்.
விருகம்பாக்கம் தொகுதிக்கு சாலிகிராமம், காமராஜர் சாலையில் உள்ள விருகம்பாக்கம் 128 வார்டு அலுவ லகத்தில் தாக்கல் செய்ய வேண்டும், தேர்தல் நடத்தும் அலுவலராக என். சத்திய நாராயணன் உள்ளார், 8925960722 என்ற எண்ணில் அந்த தொகுதியில் தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகாரளிக்கலாம்.
சைதாப்பேட்டை தொகுதிக்கு அண்ணாசாலை லிட்டில் மவுண்ட்டில் உள்ள கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும், தேர்தல் நடத்தும் அலுவலராக எஸ். வெங்கடேஷ் உள்ளார், 8925960723 என்ற எண்ணில் அந்த தொகுதியில் தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகாரளிக்கலாம்.
தியாகராயர் நகர் தொகுதிக்கு கோடம்பாக்கம், என்.எஸ்.கே. சாலையில் உள்ள கோடம்பாக்கம் மண்டல அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும், தேர்தல் நடத்தும் அலுவலராக ஜி.சரவண மூர்த்தி உள்ளார், 8925960724 என்ற எண்ணில் அந்த தொகுதியில் தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகாரளிக்கலாம்.
மயிலாப்பூர் தொகுதிக்கு ஆர்.ஏ.புரம், பசும்பொன் முத்துராமலிங்கம் சாலையில் மயிலாப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும், தேர்தல் நடத்தும் அலுவலராக பி.எஸ்.விஜயலட்சுமி உள்ளார், 8925960725 என்ற எண்ணில் அந்த தொகுதியில் தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகாரளிக்கலாம்.
வேளச்சேரி தொகுதிக்கு அடையாறு, டாக்டர் முத்துலட்சுமி சாலையில் உள்ள தெற்கு வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலராக லட்சுமி பிரியா உள்ளார். 8925960726 என்ற எண்ணில் அந்த தொகுதியில் தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகாரளிக்கலாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]