சீனாவில் ‘நோக்கியா 6 ஸ்மார்ட் போன்’ ஒரு நிமிடத்தில் விற்று சாதனை

Must read

பெய்ஜிங்:

சீனா இ.வணிகத்தில் ஜேடி.காம் என்ற இணையதளத்தில் நோக்கியா 6 ஸ்மார்ட் போன் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு நிமிடத்தில் விற்று தீர்ந்துவிட்டது. எனினும் இந்த முதல் விற்பனைக்கு எத்தனை போன்கள் கொண்டு வரப்பட்டது என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

இந்த செல்போன் ஹெச்எம்டி குலோபள் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. எனினும் சீனாவில் நோக்கியா தான் அதிக பிரபலம். சீன சந்தையில் மட்டும் தான் நோக்கியா உள்ளது என்பது குறிப்படத்தக்கது. கடந்த 4ம் தேதி வரை ஒரு மில்லியன் பதிவுகள் இந்த போனுக்கு இருந்தது.

இதன் திரை 5.5 இஞ்ச் கொண்டது. 2.5 கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு. 430 பிராசசர் திறன், 4 ஜிபி ராம், 64 ஜிபி ஸ்டோரேஜ், 128 ஜிபி வரை விஸ்தரிப்பு. முன் பக்க கேமரா உள்ளிட்ட சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் வெளிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article