புதுடெல்லி:
டெல்லி அருகே நொய்டா விளையாட்டு நகரம் அமைக்கும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக சி.ஏ.ஜி. பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அந்த அறிக்கையில், கடந்த 2007-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நொய்டா விளையாட்டு நகரம் அமைக்கத் திட்டம் தீட்டப்பட்டு, 826 ஏக்கர் பரப்பளவு நிலம் ஒதுக்கப்பட்டது என்றும், தகுதியற்ற கட்டுமான நிறுவனங்களுக்குச் சலுகைகள் அளித்த வகையில் அரசுக்கு ரூ. 9,000 கோடி இழப்பு எனக் குற்றச்சாட்டு தெரிவிக்கப் பட்டுள்ளது.
நில ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள் விளையாட்டுக்கான கட்டமைப்பை உருவாக்காமல் அடுக்குமாடி வீடுகளைக் கட்டி விற்றன என்றும் அந்த அறிக்கையில் சி.ஏ.ஜி. தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி 2016-19க்குள் விளையாட்டுக்கான கட்டமைப்புகளை உருவாக்கிட வேண்டும் என்ற நிபந்தனையும் நிறைவேற்றவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக அமைக்கப்படும் இந்த விளையாட்டு நகரத்தில் தேசிய விளையாட்டுப் போட்டிகள், காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தத் திட்டமிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel