அமெரிக்காவில் நவம்பர் 25-ம் தேதி வெளியாகவிருந்த ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தின் அடுத்த படமான ‘நோ டைம் டு டை’ தற்போது நவம்பர் 20-ம் தேதி அமெரிக்கா உட்பட உலகின் மற்ற நாடுகளிலும் வெளியாகிறது.

பிரிட்டனில் நவம்பர் 12-ம் தேதி இப்படம் வெளியாகிறது.

நடிகர் டேனியல் க்ரைக் ஐந்தாவது மற்றும் கடைசி முறையாக ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் இது.

ஏப்ரல் வெளியீடாகத் திட்டமிடப்பட்டிருந்த இந்தப் படம் கொரோனாவால் நவம்பர் மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது. கேரி ஜோஜி ஃபூகுநாகா இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

[youtube-feed feed=1]