சென்னை:  அரசு பேருந்தில் 5வயதுவரை குழந்தைகளுக்கு டிக்கெட் கிடையாது என்றும், 106.34 கோடி முறை பெண்கள் இலவச பேருந்து பயணம் மேற்கொண்டு உள்ளனர் என்று கூறியதுடன்,  பேருந்தில் கண்காணிப்பு காமிரா பொருத்துதல் மற்றும் போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று  (5-ம் தேதி)  போக்குவரத்து,  சுற்றுலா,  சுற்றுலாத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது. முன்னதாக கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்.

போக்குவரத்து மானிய கோரிக்கைக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்து மே 12ல் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார்.

மாணவர்கள் படிக்கட்டில் பயணிப்பதை தடுக்க அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். 5 வயது வரை உள்ள குழந்தை களுக்கு அரசு பேருந்துகளில் இனி கட்டணம் வசூலிக்கப்படாது,  தற்போது 3 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு அரைக்கட்டணத்தில் பயணசீட்டு வழங்கப்படுகிறது இனிமேல் அது கிடையாது என்றும் அறிவித்தார்.

மேலும், தமிழ்நாட்டில் 106.34 கோடி முறை பெண்கள் இலவச பேருந்து பயணம் செய்துள்ளனர் என போக்குவரத்து துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரியவந்துள்ளது.

அரசு பேருந்துகளில் கேமரா பொருத்தி மத்திய கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கும் பணி விரிவுபடுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

2001ம் ஆண்டுக்கு பின் தமிழ்நாட்டில் 2 முறை மட்டுமே பேருந்து கட்டணம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2001ம் ஆண்டுக்கு பின் 2011 மற்றும் 2018ம் ஆண்டுகளில் பேருந்து கட்டணம் மாற்றியமைக்கப்பட்டது.

அதே காலகட்டத்தில் கர்நாடகத்தில் 16 முறை, ஆந்திரத்தில் 8 முறை, கேரளத்தில் 9 முறையும் பேருந்து கட்டணத்தில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்த முக்கிய அறிவிப்புகள்:

1.தானியங்கி பயணச் சீட்டு வழங்கும் முறை/பண பரிவர்த்தனையற்ற பயணச் சீட்டு முறையை அறிமுகப்படுத்துதல்.

  1. பயண கட்டண சலுகை அனுமதிச் சீட்டுகளை வலைதளம் வாயிலாக வழங்குதல்.

3.சென்னை, திருச்சி மற்றும் விழுப்புரத்தில் உள்ள அரசு தானியங்கி பணிமனை நவீனமயமாக்கல் மற்றும் தரம் உயர்த்துதல்.

  1. அரசு தானியங்கி பணிமனைகள் இல்லாத இடங்களில் அரசுத்துறை வாகனங்களை ஆய்வு செய்வதற்காகவும் பராமரிப்பதற்காக அரசு நடமாடும் பணிகளை உருவாக்குதல்.
  2. அனைத்து அரசு போக்குவரத்து கழகங்களுக்கும் ஒருங்கிணைந்த பயணிகள் குறைதீர்க்கும் உதவி மையம் உருவாக்கப்படும்.
  3. மதுரை மற்றும் கோவை நகரங்களில் மொத்தம் 16 பேருந்து முனையங்கள் இணையவழி பயணியர் தகவல் மூலம் காட்சிப்படுத்தப்படும்.

7.தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் பசுமை பெட்டிகளை வாடகைக்கு விடுதல்.

  1. இணையவழி பயணச்சீட்டு முன்பதிவு வாயிலாக இரு வழி பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யும் பயணிகளுக்கான கட்டணம் சலுகை.
  2. ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணமில்லா பயணம் செயல்படுத்துதல்.
  3. திருச்சிராப்பள்ளி,விருதுநகர் மற்றும் ராமநாதபுரத்தில் அதி நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ஓட்டுநர் பயிற்சி மையம் அமைத்தல்.
  4. பொதுமக்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரடியாக வராமலேயே ஓட்டுநர் உரிமத்தில் வாகன வகை ஒப்புவிப்பு செய்தல், போக்குவரத்து அல்லாத வாகன உரிமை மாற்றத்தை தெரிவித்தல் மற்றும் பதிவு சான்றிதழ் தவணைக் கொள்முதல் விவரத்தினை மேற்குறிப்பு செய்தல் ஆகிய சேவைகளை கணினி வழியாக பெறுதல்.

12.பள்ளி வாகனங்களுக்கு முன்புறம் மற்றும் பின்புறம் கேமராவுடன் சென்சார் கருவிகள் பொருந்துதல்.

13.ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் புதிய மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் உருவாக்குதல்.

14.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் புதிய மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் உருவாக்குதல்.

15.சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தினை வட்டார போக்குவரத்து அலுவலக தரம் உயர்த்துத