சென்னை:

 பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொது செயலர் வி.கே.சசிகலாவுக்கு ஏசி, வாட்டர் ஹீட்டர், தனி குளியலறை போன்ற சிறப்பு  சலுகைகள் ஏதும் செய்து தரப்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உட்பட நான்கு பேருக்கும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டணையை உச்சநீதிமன்றம் சமீபத்தில் உறுதி செய்தது. ஜெயலலிதா ம மரணமடைந்துவிட்டதால் மற்ற மூன்று குற்றவாளிகளும் பெங்களூரு  பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறையில் தனக்கு சிறப்பு வசதிகள் அளிக்க வேண்டும் என்று அ.தி.மு.க., பொதுச்செயலாளர்  சசிகலா கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில், அவருக்கு சிறையில் அளிக்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து சென்னையின் வழக்கறிஞர் ராஜவேலாயுதம் கடந்த பிப்ரவரி 20ல் பெங்களூரு சிறை நிர்வாகத்திடம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார்.

இதற்கு பெங்களூரு சிறையின் டி.ஐ.ஜி., அளித்த பதில் வருமாறு:

“வருமான வரி கட்டுபவர் என்ற அடிப்படையில் சிறையில் சசிகலாவுக்கு டிவி வசதி அளிக்கப்பட்டுள்ளது. தனி குளியலறை, வாட்டர் ஹீட்டர், ஏசி, பாய், தலையணை உள்ளிட்டவை  அளிக்கப்படவில்லை.

கடந்த 20ம் தேதி சசிகலாவை  டி.டி.வி. தினகரன் சந்தித்தார். அந்த சந்திப்பு 35 முதல் 40 நிமிடங்கள் வரை நீண்டது.

பெங்களூரு சிறையிலிருந்து சென்னை சிறைக்கு மாற்ற சசிகலா தரப்பிலிருந்து மனு ஏதுவும் இதுவரை அளிக்கப்படவில்லை” – இவ்வாறு இவ்வாறு டி.ஐ.ஜி. தெரிவித்துள்ளார்.