புகையில்லா சமூகத்தை உருவாக்குவோம்- ஆன்ட்ரி காலண்ட்சோபெளலஸ்

Must read

வாஷிங்டன்:
பிலிப் மோரிஸ் சர்வதேச நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆன்ட்ரி காலண்ட்சோபெளலஸ்நேற்று சமூகத்தின் ஆதரவு, சரியான ஒழுங்குமுறை மற்றும் மக்கள் ஊக்கத்துடன் இருந்தால் சிகரெட் விற்பனையை அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளுக்குள் நிறுத்திவிடலாம் என்று தெரிவித்துள்ளார்.

மால்போரோ போன்ற சிகரெட் பிராண்டுகளை தயாரிக்கும் பிஎம்ஐ நிறுவனம் தற்போது புகையில்லா தயாரிப்புகளை நோக்கி முன்னேறப்போவதாக தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் உச்சிமாநாட்டில் காலண்ட்சோபெளலஸ் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

11.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஏற்கனவே புகையில்லாத தயாரிப்பிற்கு மாறிவிட்டதாகவும், சிலர் புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் புகைப்பிடிப்பதை விட சிறந்த புகையில்லாத தயாரிப்புக்கு மாறுவது ஆழமான பொது சுகாதார சாதனை என்று அவர் தெரிவித்துள்ளார்.

புகையில்லாத எதிர்காலம் உருவாவதற்கு, விஞ்ஞான ஒத்துழைப்பும் அதைவிட அதிகமாக அதனுடன் நேரடியாக தொடர்பு கொண்ட மக்களின் ஒத்துழைப்பும் அவசியம் தேவை என்று காலண்ட்சோபெளலஸ் தெரிவித்துள்ளார்.

More articles

Latest article