உசிலம்பட்டி:
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காததால் முன்னாள் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் விஷம் குடித்தார். ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கீழப்புதூரைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் உசிலம்பட்டி நகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலராக இருந்துள்ளார். தற்போதும் போட்டியிட விரும்பி அ.தி.மு.க.வில் விண்ணப்பித்து இருந்தார்.

ஆனால், அதிமுக தலைமை வெளியிட்ட பெயர் பட்டியலல் பாலமுருகன் பெயர் இல்லை. இதனால் மனம் உடைந்த அவர், விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார்.
இதை பார்த்த உறவினர்கள், பாலமுருகனை மீட்டு உசிலம்பட்டியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து உசிலம்பட்டி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Patrikai.com official YouTube Channel