வித்யாசாகர்ராவ்: மும்பையில் இருந்து வருகை… ஜெ.வை சந்திப்பாரா….?

Must read

சென்னை:
மிழக பொறுப்பை கூடுதலாக கவனித்து வரும் மராட்டிய மாநில கவர்னர்  வித்யாசாகர்ராவ் இன்று தமிழகம் வருகிறார். அவர் உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதல்வர் ஜெயலலிதாவை சந்திப்பாரா என்று கேள்வி எழும்பி உள்ளது.
தமிழக கவர்னர் பொறுப்பை கடந்த மாதம் 1-ந்தேதி  ஏற்றார் வித்யாசாகர் ராவ். நாளை அக்டோபர் 2-ந்தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு  மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
%e0%ae%8e%e0%ae%a9%e0%af%88%e0%ae%b2%e0%ae%af
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கவர்னர் வித்யாசாகர்ராவ் இன்று மாலை சென்னை வருகிறார்.
அவர் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சென்று பார்ப்பார் என்று தெரிகிறது.
இதே போல மத்திய மந்திரி வெங்கையா நாயுடுவும் இன்று சென்னை வருகிறார். அவரும் முதல்வரை பார்க்க அப்பல்லோ வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

More articles

Latest article