சென்னை:

மிழகம் முழுவதும் ஜாக்டோ, ஜியோ அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், மீறி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என்றும்,  துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் அரசுக்கு எதிராக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரி யர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு கோர்ட்டு தடை விதித்துள்ள நிலை யிலும், தடையை மீறி போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதற்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தும்,  வரும் 15ந்தேதி அமைப்பின் நிர்வாகிகள் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. மேலும்,  மாணவர்க ளுக்கு பாதிப்பு ஏற்பட்டால், ஆசிரியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்து, இழப்பீடு வழங்க வேண்டியது வரும் என்றும் மேலும் 12 கேள்விகளை எழுப்பி அதற்கு விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கின் இன்றைய விசாரணையின்போது, பள்ளி கல்வி இயக்குநரகம் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என்றும், போராட்டம் காரணமாக  33,487 ஆசிரியர்கள் பணிக்கு செல்லவில்லை என்று தெரிவித்துள்ளது.

அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வேலை நிறுத்த நாட்கள் அங்கீகரிக்கப்படாத விடுமுறை நாட்களாக கருதப்படும் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட மாட்டாது என்றும்,  43,508 ஆசிரியர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கை தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதகவும் கூறி உள்ளது.

தொடர்ந்து வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.