பாலியா, உத்தரப்பிரதேசம்
பொருளாதார மந்த நிலை இருக்கையில் மக்கள் எவ்வாறு புதிய ஆடைகளை வாங்குகிறனர் என பாஜக நாடாளுமன்ற உறுப்பின்ர் கேட்டதால் மக்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர்
இந்தியாவில் கடும் பொருளாதார மந்த நிலை நிலவி வருவதாக நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி உள்ளிட்ட பலர் தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து இரண்டு காலாண்டுகள் பொருளாதார வளர்ச்சி முழுமையாகக் குறையும் போது முழுவதுமாக மந்த நிலை உண்டாகும் எனவும் பல பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். எனவே இது போல நிலை இந்தியாவில் ஏற்பட வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக வாகனத்துறையில் கடும் விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளதை வல்லுநர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். அத்துடன் இந்த விற்பனைச் சரிவால் உதிரி பாகங்கள் உற்பத்தி முழுவதுமாக நின்றத்கால் சுமார் 30 லட்சத்துக்கும் அதிகமான தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. பலர் இதனால் பணி இழந்துள்ளனர்.
இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் பாலியா பகுதியில் ஒரு பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பேசிய பாஜக மக்களவை உறுப்பினர் வீரேநிதிர சிங் ”டில்லியில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை உள்ளதாக பலரும் சொல்கின்றனர், அப்படி இருந்தால் நாம் கிழிந்த வேட்டி மற்றும் சட்டையுடன் தான் இருந்திருப்போம்.
ஆனால் மக்களில் பலர் கோட்டுக்களையும் மேற்சட்டைகளையும் அணிகின்றனர். பொருளாதார மந்த நிலை இருந்தால் நம் புதிய துணிகளை அது கால்சட்டையோ, பைஜாமாவோ எதையும் வாங்க மாட்டோம். நமது பழைய கிழிந்த துணிகளைத் தான் அணிவோம்” எனக் கூறியது மக்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
வீரேந்திர் சிங் இவ்வாறு பேசுவது இது முதல் முறை அல்ல. கடந்த டிசம்பர் மாதம் மக்களவையில் வாகன தொழில் முடக்கம் குறித்த விவாதத்தில் ”வாகன உற்பத்தி குறைந்துள்ளது என்றால் போக்குவரத்து நெருக்கடி எப்படி இருக்கும்? நமது நாட்டின் பெருமையைக் குலைக்க ஒரு சிலர் வாகன விற்பனை குறைந்து வருவக்தாக கூறுகின்றனர். ஒரு வீட்டில் 20 வாகனங்கள் உள்ளன. எப்போதுமே வாடிக்கையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கூறுவதை வைத்து முடிவு எடுக்கக் கூடாது” எனத் தெரிவித்தது சர்ச்சையை உண்டாக்கியது.