டில்லி-
புதிய 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் 8 ந்தேதி ரூ.500 மற்றும் 1000 பணமதிப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி அறிவித்தார். இதையடுத்து புதிய ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன. இந்தப் புதிய ரூ.2000 நோட்டுகளை பணம் பதுக்கலில் ஈடுபடுவோர் எளிதாக பதுக்கமுடியும் என்பதால் அதை அரசு திரும்ப பெறும் என கூறப்பட்டது.
இந்நிலையில் மக்களவையில் இதுதொடர்பான கேள்விக்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய நிதிஅமைச்சர் அருண்ஜெட்லி, புதிய ரூ.2000 நோட்டுகளை திரும்ப பெறும் திட்டம் மத்தியஅரசிடம் இல்லை என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், செல்லாத நோட்டுகளாக அறிவிக்கப்பட்ட ரூ 500 மற்றும் 1000 நோட்டுகள் கடந்த டிசம்பர் 10 ம் தேதி வரை ரூ. 12.44 லட்சம் கோடி திரும்ப வந்திருப்பதாக தெரிவித்தார்.