அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு பயண வழி உணவகங்களில் தனி அறையில் உணவு தரக்கூடாது என்று அரசு போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.

தொலைதூர பேருந்துகள் நிறுத்தப்படும் ஓட்டலில் ஓட்டுநர், நடத்துனர் உணவருந்த தனி அறை ஒதுக்கப்படுகிறது இதனை தடை செய்து பயண வழி உணவக உரிமையாளர்களுக்கு அரசு போக்குவரத்துக் கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அந்த சுற்றறிக்கையில் “அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உணவு வழங்கப்படும் பொது அறையிலேயே வழித்தட போக்குவரத்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகியோருக்கும் உணவு வழங்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்-க்கு உணவருந்த தனி அறை ஏதும் ஒதுக்கப்பட வேண்டாம்” என்று குறிப்பிட்டுள்ளது.