மோடியை மம்தா பாராட்டியதில் அரசியல் கிடையாது!! நெட்டிசன்

கொல்கத்தா::

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த செய்திகளை சமூக வளை தளங்களில் நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். பார்வதி கோயங்கா என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் இது தொடர்பான கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.

அதில், ‘‘உண்மையிலேயே மம்தா பிரதமர் மோடியை புகழ்ந்தாரா? அல்லது சில போலி தாராளாவாதிகள் அவரை தவறாக புரிந்து கொண்டார்களா? என்பது தெரியவில்லை. ‘ரைசிங் பெங்கால்’ மேடையில் மம்தா மாநிலத்தின் முதல்வர் என்ற மிகப்பெரிய பொறுப்பில் அமர்ந்துள்ளார்.

இதில் தொழிலதிபர்கள், பத்திரிக்கையாளர்கள், ராணுவ அதிகாரிகள் கலந்துகொண்டுளளனர். இவர்களுக்கு முன்பு பிரதமரை அவமதிக்கும் வகையில் பேச முடியாது. அல்லது உணர்வுகளை வெளிப்படுத்த முடியாது. அங்கு அவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவராக அமர்ந்திருக்கவில்லை. அதனால் எதையும் எதோடும் கலந்து பேசக் கூடாது.

மேலும், அவர் பாஜ மற்றும் அமித்ஷாவுக்கு எதிரான தனது சிந்தனைகளை தெளிவாக கூறியுள்ளார். அது அரசியல் மேடை கிடையாது. மாநிலத்தில் முதலீடு செய்ய தொழிலதிபர்களை வரவழைத்து விட்டு பிரதமருக்கு எதிராக எதாவது பேசினால் அது அவருக்கு தீங்காக அமையும். மற்றபடி அதில் எதுவும் இல்லை’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
no politics in mamtha praise modi netizen