திருவனந்தபுரம்:
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் சென்ட்ரல் விளையாட்டரங்கத்தில் நடந்த குடியரசு தின விழாவில் ஆளுனர் சதாசிவம் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் பேசுகையில், ‘‘எந்தெந்த துறைகளில் நாம் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பது குறித்து சிந்திக்க வேண்டும். அரசியல் ரத்தம் மற்றம் மத சண்டைகளில் சில இளைஞர்கள் ஈடுப டும்போக்கு கவலை அளிக்கிறது. இந்தியாவிற்குள்ளேயும், வெளியேயும் சிலர் தீவரவாத செயல்களில் ஈடுப டுவது இடையூறாக உள்ளது.
அனைத்து பிரச்னைகளில் இருந்தும் நம்மை பாதுகாக்க அரசியல் சாசனத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனினும் எப்போதும் நம்மை நாமே பாதுகாத்து கொள்ள தயாராக இருக்க வேண்டும். நமது மாநிலத்தின் கவுரவத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் செயல்களில் இருந்து பாதுகாக்க வேண் டும்’’ என்றார்.
மேலும், அவர் பேசுகையில், ‘‘ஜனநாயக சமூகத்தில் மதநல்லிணக்கத்¬ அச்சுறுத்தும் அரசியல், மத வெறுப்புகள், தீவிரவாதம் ஆகியவற்றுக்கு இடமளிக்க கூடாது. தேச ஒற்றுமையின் மதிப்பு மற்றும் அதன் ஆழ்ந்த அப்பணிப்புகளை மனதில் வைத்து அரசியல் சாசனத்தை கொண்டாட வேண்டும். எதிர்கால இந்தியாவுக்கு நாம் ஒவ்வொருவரும் ஒரு பொறுப்பை மேற்கொள்ள உறுதி ஏற்க வேண்டும்.
நமது கடின உழைப்பு, குணாதிசியம், பங்களிப்பு, அர்ப்பணிப்பு ஆகியவை மூலம் செல்வம் மிக்க, அதிக வளர்ச்சி, அதிக சக்தி மிக்க இந்தியாவை உருவாக்க உறுதி ஏற்க வேண்டும்’’ என்றார்.
விழாவில் முதல்வர் பினராய் விஜய், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.