டில்லி,

நாடு முழுவதும் சாதி மறுப்பு திருமணங்கள் செய்தால், அவர்கள்மீது தாக்குதல் நடைபெறுவதும், கவுரவக் கொலை செய்யப்படுவதும் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில்,  சாதி மறுப்பு திருமணம் செய்பவர்கள் மீதான தாக்குதல் சட்டவிரோதமானது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

சாதி மாறி திருமணம் செய்பவர்களை பாதுகாக்கும் வகையில் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் கடுமையான சட்டங்கள் இருந்தாலும் ஒருசில இடங்களில் அவ்வப்போது சாதி மறுப்பு திருமணங்களால் கவுரவக் கொலைகள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.

குறிப்பாக வட மாநிலங்களில் சாதி மாறி திருமணம் செய்பவர்கள்மீது  பகிரங்கமாக தாக்குதல்நடத்தப்படுவதும், பொதுமக்கள் முன்னிலையிலேயே அவரகள் கொடூரமாக அடித்துக்கொல்லப்படும் நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன.

இதுபோன்ற சாதி மறுப்பு திருமணம் செய்துகொள்பவர்களை பாதுகாப்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று அதிரடி தீர்ப்பை கூறி உள்ளது.

அதில், சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களை பெற்றோர்கள் கேள்வி எழுப்பக் கூடாது என்றும் அவர் களை  பஞ்சாயத்து அமைப்புகளோ, சமூக அமைப்புகளோ அழைத்து  விசாரிக்கவோ, கேள்வி கேட்கவோ கூடாது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

ஒரு ஆணும், ஒரு பெண்ணும் திருமணம் செய்துகொள்வது அவர்களது விருப்பம், காதல் கலப்புத் திருமணம் செய்வதை யாரும் தடுக்கக்கூடாது என்றும்,  மேலும், சாதி மறுப்பு திருமணம் செய்வது குறித்து மத்திய அரசு சட்டம் உருவாக்க வேண்டும்  சாதி மறுப்பு திருமணம் செய்பவர்கள் மீது நடைபெறும்  தாக்குதல் சட்டவிரோதமானது என்றும்  உச்ச நீதிமன்றம்

தமிழகத்தில்  சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களை பாதுகாக்க சிறப்பு தனிப்பிரிவு ஒன்று மதுரை உயர்நீதி மன்ற உத்தரவுபடி ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]