டில்லி

ன்று அறிவிக்கப்பட்ட அரசியல் சாசன அமர்வில்  தலைமை நீதிபதியை குறை கூறிய நான்கு நீதிபதிகள் பெயர் இடம் பெறவில்லை.

உச்ச நிதிமன்ற மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப்,  மதன் லோகுர் ஆகியோர் செய்தியாளர்களை திடீரென வெள்ளிக்கிழமை அன்று சந்தித்தனர்.    அந்த சந்திப்பில் தலைமை நீதிபதியைப் பற்றி அவர்கள் மறைமுகமாக குறை கூறினார்கள்.  உச்சநீதிமன்றத்தில் நிர்வாகம் சரியில்லை எனவும் பல விரும்பத்தகாத விஷயங்கள் நடைபெறுவதாக தெரித்தனர்.

மூத்த நீதிபதிகளின் இந்தப் பேச்சு மக்களிடையே பரபரப்பை உண்டாக்கியது. அதைத் தொடர்ந்து சமரசம் ஏற்படுத்த ஒரு குழு ஒன்று அமைக்கப்பட்டு அவர்கள் அதிருப்தி நீதிபதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.    அதன் பிறகு இந்தப் பிரச்சினை முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக அறிவிக்கப் பட்டது.

இன்று மிக முக்கிய நிகழுவுகளை  விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.     தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த அமர்வில் மொத்தம் 5 நீதிபதிகள் தேர்வு செய்யப்பட்டுளனர்.    இந்த அமர்வு ஆதார் பற்றிய வழக்கு, ஓரினச் சேர்க்கைக்கு எதிரான சீராய்வு மனு, சபரிமலையில் பெண்களை அனுமதி கோரி உள்ள வழக்கு போன்ற வழக்குகளை விசாரிக்க உள்ளன.

இந்த அமர்வில் அதிருப்தி நீதிபதிகள் யாரும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.