சென்னை

மிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி உள்ளார்.

நாடெங்கும் கொரோனா நோயாளிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.  தினசரி பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கி வருகிறது.  இந்த இரண்டாம் அலை கொரோனா பரவலில் பலருக்கு உயிர் ஆபத்து ஏற்படுகிறது.  இந்த நோயாளிகளுக்கு அளிக்க பல மாநிலங்களில் தேவையான அளவு ஆக்சிஜன் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

நேற்று தமிழகத்துக்கு விமானம் மூலம் வந்த 6 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை பார்வையிட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம், “இதுவரை தமிழகத்தில் 48 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.   கொரோனா தடுப்பூசிகள் குறித்துப் பல வதந்திகள் கிளம்பினாலும் மக்கள் ஆர்வத்துடன் ஊசி போட்டு கொள்கின்றனர்.

கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அளிப்பதும் திறம்பட நடந்து வருகிறது.  தமிழக மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏதும் இல்லை.  சமீபத்தில் அடுக்கம்பாறையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 7 பேர் உயிரிழந்ததாக வந்த தகவல்கள் தவறானவை.  இந்த மரணங்களுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணம் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.