பியாங்யாங்

டகொரியாவில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை என அதிபர் கிம் ஜாங் உன் கூறி  உள்ளார்.

வடகொரிய நாட்டின் எல்லை நகரான கேசாங்கில் கடந்த ஜூலை மாதம் ஒருவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதால் அந்த நகரை மூட அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டார். நகரின் எல்லைகள் சீல் வைக்கப்பட்டன.  சுமார் ஆயிரக்கணக்கானோர் நகரில் தனிமையில் இருந்தனர்.  கொரோனா பரவுதலைத் தடுக்க அதிபர் கிம் கடும் நடவடிக்கைகளை எடுத்தார்.

இந்நிலையில் சீனாவில் இருந்து வருபவர்களைச் சுட்டுக் கொல்ல வேண்டும் என அவர் உத்தரவிட்டதாகவும் ஆதாரமற்ற செய்திகள் பரவின.  உலகெங்கும் கொரோனா பாதிப்பு உள்ள போதிலும் வட கொரியாவில் பாதிப்பு குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை.  வடகொரியாவில் கொரோனா கடடுப்ப்டுத்தலுக்கு பிறநாடுகளின் உதவி தேவை இல்லை என அறிவிக்கப்பட்டது.

சமீபத்தில் தொழிலாளர் அக்கட்சியின் 75 ஆம் ஆண்டு விழாவில் அதிபர் கிம் கலந்து கொண்டார்.  அப்போது அவர் வட கொரியாவில் ஒருகருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை எனத் தனது உரையில் தெரிவித்தார்.  வட கொரிய கொரோனா நிலை குறித்து உரையாற்றிய அதிபர் கிம் ஏவுகணைகளின் அணிவகுப்பை பார்வையிட்டுள்ளார்.   கொரோனாவால் உலக அளவில் பொருளாதார நெருக்கடி உள்ள நிலையில் இந்த ஏவுகணை அணிவகுப்பு நடந்துள்ளது.