சென்னை: ரூ.10 கோடியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆளில்லா விமான கழகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அத்துடன், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் சூரிய சக்தி மைய கண்காட்சியையும் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். அப்போது, சூரியனையும் சக்தியையும் யாராலும் பிரிக்க முடியாது என்று கூறினார்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.10 கோடி மதிப்பில் ஆளில்லா விமான கழகம் அமைக்கப்பட்டு வந்தது. இதன் பணிகள் முடிவடைந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து, . ஆளில்லா வான்வழி வாகன கண்காட்சியை தொடங்கி வைத்தார். அத்துடன் வான்வழி வாகன செயல் விளக்கத்தை பார்வையிட்டார். கண்காணிப்பு ட்ரான், தொலைதூர கண்காணிப்பு ஆளில்லா விமானம் உள்ளிட்டவை கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
இதைதைதொடர்ந்து மதுரை காமராசர் பல்கலைக்கழக சூரிய சக்தி மையத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ரூ.7.25 கோடியில் அமைத்த சூரிய மின்சக்தி மையத்தையும் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, உயர்கல்வித்துறையில் பணியாற்றி உயிரிழந்த குடும்பத்தினர் 34 பேருக்கு பணி நியமன அணையும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், சூரியனையும் சக்தியையும் யாராலும் பிரிக்க முடியாது. நான் அரசியல் பேசுவதாக கருதவேண்டாம். ஆராய்ச்சி நிறுவணங்காளாக பல்கலைக்கழகங்கள் மாற வேண்டும் என தெரிவித்தார். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது. கல்வியில் சிறந்த மாநிலம் என்ற பட்டம் மட்டும் நமக்கு போதாது என்றும் உயர்கல்வியில், ஆராய்ச்சியில் சிறந்த தமிழ்நாடு என்ற பட்டம் பெருமளவிற்கு உழைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.