1995 முதல் மாநிலத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள் எதுவும் நிறுவப்படவில்லை என்று குஜராத் அரசு சட்டசபையில் தெரிவித்துள்ளது.

இருப்பினும், கடந்த ஆண்டு (2023) நான்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதாகக் கூறியுள்ளது.

மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் புதிதாக அமைக்கப்பட்ட 508 செவிலியர் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஒன்று மட்டுமே அரசு கல்லூரி என்றும் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் எம்எல்ஏ அமித் சாவ்தா வியாழனன்று சட்டமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அரசு, மாநிலத்தில் 6 அரசு மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருவதாகவும், 1871-ல் முதலில் அகமதாபாத்திலும், கடைசியாக 1995-ம் ஆண்டு பாவ்நகரிலும் தொடங்கப்பட்டதாகவும் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தது.

எனவே, 1995க்குப் பிறகு குஜராத் மாநிலத்தில் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி கூட கட்டப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது.