சென்னை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுக சாமி அணையம் அவர் தோழி சசிகலாவிடம் விசாரணை நடத்த தேவை இல்லை என முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது

.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல சந்தேகங்கள் எழுந்தன. இது குறித்து விசாரிக்க தமிழக அரசு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் ஆணையம் ஒன்றை அமைத்தது. இந்த ஆணையம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த ஆணையத்தில் பலர் இதுவரை சாட்சியம் அளித்துள்ளனர். நேற்று முன் தினம் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆணையத்தில் சாட்சி அளித்தார். நேற்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சாட்சியம் அளித்துள்ளார். இன்று இந்த ஆணையத்தில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சாட்சி அளிப்பதாக இருந்தது.

ஆனால் இன்று ஓ பன்னீர்செல்வம் தரப்பில் இருந்து விலக்கு அளிக்கும்படி கடிதம் எழுதப்பட்டிருந்தது. அதை ஒட்டி வரும் 29 ஆம் தேதி பன்னீர்செல்வம் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும் என ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.

ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிடம் விசாரணை நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரிடம் விசாரணை நடத்த தேவை இல்லை என ஆணையம் முடிவு செய்துளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.