டில்லி:

மாசு கட்டுப்பாடு சான்றிதழ் இல்லாமல் வாகனங்களுக்கு கண்டிப்பாக இன்சூரன்ஸ் செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காற்று மாசு கட்டுப்பாட்டை தடுக்க உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணை உ ச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் நீதிபதிகள் மதன் பி லோகூர் மற்றும் தீபக் குப்தா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு சுற்றுசூழல் மாசு ஆணைய பரிந்துரைகளை ஏற்று இந்த உத்தரவை வழங்கியுள்ளது.

டில்லியின் வடக்கு மண்டலத்தில் நடந்த மாசு கட்டுப்பாடு குறித்த ஆய்வுக்கு பின் சுற்றுசூழல் மாசு கட்டுப்பாடு வாரியம் கடந்த ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது.

இந்த வழக்கில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகமும் பிரதிவாதியாக சேர்க்கப்பட் டுள்ளது. இந்த துறையும் மாசு கட்டுப்பாடு ஆணைய பரிந்துரைக்கு ஆதரவான கருத்துக்களை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மாசு கட்டுப்பாடு சான்றிதழ் வழங்கும் நடைமுறையை வாகன இன்சூரன்சுடன் தொடர்புபடுத்த வேண்டும் என்ற கருத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து அறிவியல் மற்றும் சுற்றுசூழல் மைய டைரக்டர் ஜெனரல் சுனிதா நராய்ன் கூறுகையில், ‘‘ இது ஒரு முக்கியமான நகர்வாகும். மாசு கட்டுப்பாடு சான்றிதழ் திட்டம் மிக மோசமான தோல்வியை ச ந்தித்திருப்பதாக சுற்றுசூழல் ஆணையம் தெரிவித்துள்ளது.

டில்லியில் 23 சதவீத வாகனங்கள் மட்டுமே மாசு கட்டுப்பாடு சான்றிதழ் பெற வந்துள்ளது. வாகன இன்சூரன்ஸ் திட்டத்துடன் இணைக்கப்பட்டதால் இதன் வருகை அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு நாடு முழுவதும் அமலாகிறது’’ என்றார்.

‘‘இந்த தொடர்பை ஆன்லைன் மூலமும், ஆங்காங்கே தகவல் மையங்கள் அமைத்தும் மேற்கொள்ள வேண்டும். மாசு கட்டுப்பாடு சான்றிதழ் வழங்கும் மையங்களை மாநில அரசு ஆய்வு மேற்கொள்ள வேண் டும். கடுமையான பரிசோதனை முறைகள் அமல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்’’ என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.