மண்ணைக் கவ்விய பா.ஜ.க. : மகாராஸ்திரா உள்ளாட்சித் தேர்தல்

Must read

Vaishnavi Rajmohan
Vaishnavi Rajmohan is a biotechnologist by profession and a rationalist by practice. Her writing interests include literature, social and scientific articles.

 

MAHA ELECTIONS 1
புதிதாய் உருவான நகரப்பஞ்சாயத்துகளில் உள்ள 102 வார்டுகளில் உள்ளாட்சித் தேர்தல் கடந்த ஞாயிறன்று தேர்தல் நடைப்பெற்றது

2014ல் மாநில அரசு, தாலுகா தலைமையிடங்களைப் பிரித்து புதிதாக 138 நகரப் பஞ்சாயத்துக்களை உருவாக்கியது. இந்த இடங்களுக்கு இரண்டுக் கட்டமாக உள்ளாட்சித் தேதல் நடைபெற்றது. முதல் கட்டமாக 19 நகரப் பஞ்சாயத்துக்களில் 345 இடங்களுக்கு ஜனவரியில் தேதல் நடைப்பெற்றது.
இரண்டாம் கட்டமாக, கடந்த ஞாயிறுக் கிழமை, மகாராஸ்திரத்தில் உள்ள ஆறு நகரப் பஞ்சாயத்துகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைப்பெற்று திங்கட்கிழமை முடிவுகள் அறிவிக்கப் பட்டன.
102 இடங்களில் நடைபெற்ற தேர்தலில், அதிகப் பட்சமாக காங்கிரஸ் 21 இடங்களைக் கைப்பற்றியது. சிவ சேனை மற்றும் தேசியக் காங்கிரஸ் கட்சியும் தலா 20 இடங்களைக் கைப்பற்றியது.
முன்னாள் முதல்வரின் மானம் காத்த தேர்தல்:
முன்னாள் முதல்வர் நாராயண் ரானே

காங்கிரஸ் மூத்த்த் தலைவரும் முன்னாள் முதல்வருமான நாராயன ராணே கடந்த 2014 சட்டசபை மற்றும் 2015 பாந்த்ரா இடைத்தேர்தலிலும் தோலிவியைச் சந்தித்து இருந்தார். இவ்வேளையில்.  ராணேவின் சொந்தப் பகுதியான கொங்கனில் உள்ள கூடல் நகர் பஞ்சாயத்துகளில் காங்கிரஸ் வேற்றிப் பெற்றுள்ளது அவருக்கு மிகுந்த ஆறுதலைத் தந்துள்ளது.
கூடல் நகர் பஞ்சாயத்திற்குட்பட்ட 17 இடங்களில் காங்கிரஸ் 09 இடங்களைக் கைப்பற்றியுள்ளது மிக முக்கியத்துவமானது. ஆறு இடங்களை வென்ற சிவசேனா இரண்டாம் இடத்தைப் பெற்றது. ஆளும் கட்சியான பா.ஜ.க இங்கு ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. சிவசேனை மற்றும் பா.ஜ.க இங்கு பிரபலத் தலைவர்களைக் களமிறக்கி பிரச்சாரத்தில் ஈடுப்பட்டன. மத்திய ரயில்வே மைச்சர் சுரேஸ்பாபுவும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
modi 123
ஓய்ந்துப் போன மோடி அலை

 
ஒஸ்மனாபாத்தில் உள்ள லோகரா நகர் பஞ்சாயத்தில் அதிகப் பட்சமாக சிவசேனா 09 இடங்களையும், தேசியக் காங்கிரஸ் கட்சி 04 இடங்களையும், காங்கிரஸ் 03 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. இங்கு பா.ஜ.விற்கு பூஜியம் தான் கிடைத்தது.
சோலாப்பூரில் உள்ள மோகோல் மற்றும் மாதா நகர் பஞ்சாயத்துகளில் சிவசேனை மற்றும் தேசிய காங்கிரஸ் பா.ஜ.க.வை விட சிறப்பாக வாக்குகள் பெற்றுள்ளன.
 
சடாராவில் உள்ள லோலன்ட் நகர் பஞ்சாயத்தில் உள்ள 17 இடங்களில், அதிகப் அட்சமாக தேசிய காங்கிரஸ் 08 இடங்களையும், காங்கிரஸ் 06 இடங்களையும் பா.ஜ.க 02 இடங்களைக் கைப்பற்றியது.
 
பொதுவாக, உள்ளாட்சித் தேர்தலில் ஆளும்கட்சி வெற்றிப்பெறுவது வழக்கம்.
ஆளும்கட்சி தம்முடைய அதிகாரப் பலத்தைப் பயன்படுத்திய உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிப் பெறுவது நிதர்சனமான உண்மை.  இறைவனின் தூதர் என்று வெங்கையா நாயுடுவால் போற்றப்பட்ட இந்தியப் பிரதமர் மோடியின் அலை அவர்கள் ஆட்சி செய்யும் மாநிலத்திலேயே எடுபடவில்லை என்பது குறிப்பிட்த் தக்கது.
FADNAVIS 1
மகாராஸ்திர முதல்வர் ஃபட்னாவிஸ் ( ” பா.ஜ.க. “)

இந்தத் தோல்வி, ஆளும் விற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

More articles

Latest article