டெல்லி:
 ஜூலை 31 வரை பயணிகள் விமான சேவைகள் கிடையாது என்று  விமான போக்குவரத்து துறை அறிவித்து உள்ளது. ஏற்கனவே ஜூலை 15ந்தேதிக்கு பிறகு விமான சேவைகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது புதிய  அறிவிப்பு வெளியிடப் பட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து உள்ளதால், 6வது கட்டமாக ஊரடங்கு ஜூலை 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், பல்வேறு தளர்வுகளுடன் சில இடங்களில் போக்குவரத்துக்கும், தொழிற்நிறுவனங்கள், கடைகள் உள்பட அத்தியாவசிய தேவைகளுக்காக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில்6,  இந்தியாவில் சர்வதேச விமான சேவைகளுக்கான தடை ஜூலை 31-ந் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஏற்கனவே நாடு முழுவதும் உள்நாட்டு பயணிகள் சேவை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், சர்வதேச விமான போக்குவரத்து தடை ஜூலை 31-ந் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. உள்நாட்டு விமான சேவைகளை 33%-ல் இருந்து 45% ஆக அதிகரிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.