ஆன்டிகுவா:
பிஎன்பி (பஞ்சாப் நேஷனல் வங்கி) மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மெகுல் சோக்சியை கூட்டிப் போக இந்தியாவில் இருந்து அதிகாரிகள் வருவது குறித்து எந்தவித தகவலும் வரவில்லை என்று ஆன்டிகுவா அரசு தெரிவித்து உள்ளது. ஆனால், இந்திய விமானம் ஒன்று தரையிறங்கி இருப்பதை உறுதி செய்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் பேங்க் ஊழல் தொடர்பாக குற்றம் சாட்டப்பபட்டுள்ள பிரபல வைர வியாபாரி நிரவ்மோடி வெளிநாட்டுக்கு தப்பி சென்றுள்ள நிலையில், இந்த ஊழல் தொடர்பாக அவருடைய உறவினர் மெகுல் சோக்சியும் சிக்கினர். அவரும் வெளிநாட்டுக்கு பறந்துவிட்ட நிலையில், தற்போது ஆண்டிகுவா குடியுரிமை பெற்று அங்கு வசித்து வருகிறார்.
மெகுல் சோக்ஷியை இந்தியா கொண்டு மத்திய அரசு ஆண்டிகுவா அரசுடன் இந்தியா பேசி வருகிறது. இதற்கிடையில் மெகுல் சோக்ஷியின் பாஸ்போர்ட்டை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை முடக்கி வைத்துள்ளது. இந்த நிலையில் மெகுல்சோக்ஷி விரைவில் விசாரணைக்காக இந்திய அழைத்து வரப்பட இருப்பதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், ஆண்டிகுவா பிரதமர் அலுவலகம் இது தொடர்பாக விளக்கம் அளித்து உள்ளது. அதில், மெகுல் சோக்ஷியையோ இந்தியா அழைத்துச் செல்வது குறித்தோ, இந்தியாவிடம் ஒப்படைப்பது குறித்தோ, இந்திய அமலாக்கத்துறை அல்லது இந்திய சிபிஐ அமைப்புகளிடம் இருந்து இதுவரை எந்தவொரு விவரங்களும் வரவில்லை என தெரிவித்து உள்ளது.
அதேவேளையில், ஏர் இந்தியா விமானம் போர்ட் ஆஃப் ஸ்பெயின் பகுதியில் இறங்கி உள்ளது என்பதை ஆண்டிகுவா அரசு உறுதி செய்துள்ளது. இந்த விமானம் மெகுல் சோக்ஷியை இந்திய அழைத்து வர அனுப்பப்பட்டதா என்பது குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
இதற்கிடையில் மெகுல் சோக்ஷி குறித்து கூறிய ஆன்டிகுவா நாட்டு பிரதமர் அலுவலக அதிகாரி லியோனர் மாக்ஸ் ஹர்ஸ்ட் கூறுகையில், மெகுல் சோக்சியை இந்தியா கொண்டு செல்வார்கள் என்றால் கொண்டு செல்லட்டுமே, அவர் எங்கள் நாட்டுக்கு எதையும் கொண்டு வரவில்லை, தேவையில்லாத விளம்பரங்களைத்தான் கொடுத்து வருகிறார்’ என்று தெரிவித்து உள்ளார்.
இந்திய விமானம் ஆன்டிகுவா நாட்டின் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் தரையிறங்கி உள்ள நிலையில், மெகுல் சோக்ஷியை அழைத்து வரத்தான் இந்தியாவில் இருந்து தனி விமானம் அனுப்பப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.