டில்லி:
தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சிக்காக சிறப்பு நிதி வழங்கும் திட்டம் இல்லை என்று மத்திய நீர்வளத்துறை தெரிவித்து உள்ளது.
பாராளுமன்ற மக்களவையில், தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, வறட்சியைப் போக்க தமிழக அரசுக்கு மத்தியஅரசு நிதி ஒதுக்கும் திட்டம் உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு எழுத்மூலம் பதில் அளித்துள்ள மத்தியநீர்வளத்தறை,மிழகத்தில் நிலவும் கடும் வறட்சிக்காக சிறப்பு நிதி வழங்கும் திட்டம் இல்லை என கைவிரித்து உள்ளது.
ஏற்கனவே, தமிழகத்தில் உள்ள 153 நீர்நிலைகளை புனரமைப்பு செய்ய சுமார் ரூ.77 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும், இதில் கடந்த ஜூன் மாதம் வரை ரூ.16 கோடி தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.