புதுடெல்லி: ராணுவ கேன்டீன் ஸ்டோர்களை மூடும் எண்ணம் மத்திய அரசுக்கு ஒருபோதும் கிடையாது என்று தெரிவித்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

தமிழகத்தின் விருதுநகரில் செயல்படும் ராணுவ வீரர்களுக்கான கேன்டீன் மூடப்படாமல் இருப்பதை மத்திய அரசு உறுதிசெய்ய வேண்டுமென மக்களவையில் கோரினார் விருதுநகர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் மாணிக் தாகூர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மலா, “ராணுவ அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் ராணுவ கேன்டீன்களை மூடும் எண்ணம் மத்திய அரசுக்கு ஒருபோதும் கிடையாது.

‍அதேசமயம், தற்போது சேவையில் இருக்கும் ராணுவ வீரர்கள் மற்றும் ஓய்வுபெற்ற வீரர்களின் எண்ணிக்கை அடிப்படையில், குறிப்பிட்ட பகுதிகளில் செயல்பட்டுவரும் ராணுவ கேன்டீன் ஸ்டோர்களின் எண்ணிக்கையில் மாற்றம் செய்யப்படும்” என்றார் அமைச்சர்.