பெய்ஜிங்:  கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பயணிகளை பாதுகாக்கும் நடவடிக்கையாக, சீன விமான நிறுவனம் சூடான உணவு, பத்திரிகைகள், போர்வைகள் வழங்க தடை விதித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சம் பாடாய்படுத்துகிறது. சீனாவில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் வைரஸ் தாக்குதலில் இருந்து பயணிகளை காக்க, சீன ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் ஒரு முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கின்றன. அதாவது, விமானங்களில் பயணிகளுக்கு சூடான உணவு, பத்திரிகைகள், போர்வைகள் இனி கிடையாது என்பது தான் அந்த அறிவிப்பு.

தைவானின் சீனா ஏர்லைன்ஸ், பயணிகள் தங்கள் சொந்த குளிர்பான பாட்டில்களை கொண்டுவர ஊக்குவிப்பதாகவும், மீண்டும் பயன்படுத்தக்கூடிய டிஸ்போசபில் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது.

சீன விமான நிறுவனமும் அதன் பிராந்தியக் குழுவான மாண்டரின் ஏர்லைன்ஸும் திங்கள்கிழமை முதல் சூடான உணவை வழங்குவதை நிறுத்திவிட்டன. போர்வைகள், தலையணைகள், துண்டுகள், பத்திரிகைகள் மற்றும் செய்தித்தாள்கள் வழங்குவதையும் நிறுத்தினர்.

அதே நேரத்தில் பானங்கள் மற்றும் ஹெட்ஃபோன்கள் கோரிக்கையின் பேரில் மட்டுமே வழங்கப்படுகின்றன. எங்கள் விமானத்தில் பொழுது போக்கு இருப்பதால், எல்சிடி திரைகள் எல்லா நேரத்திலும் தொடப்படுகின்றன. எனவே புறப்படும் முன்பு ஒவ்வொரு விமானத்தையும் நன்றாக சுத்தப்படுத்துகிறோம் என்று விமான அதிகாரிகள் கூறி இருக்கின்றனர்.

டுவிட்டர் பயனாளிகள் பலரும் இந்த நடவடிக்கைகளுக்கு பதில் அளித்து வருகின்றனர். பயணிகள் அனைவரும் எங்கே? பயணிகள் அனைவரையும் ஒரு வாரம் கண்காணிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்று ஜான் ஹொனெஸ்டி பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

30 முதல் 60 நாட்களுக்கு சீனாவில் இருந்து அனைத்து விமானங்களையும் நிறுத்த நான் பரிந்துரைக்கிறேன். அது பொருளாதாரத்தை கொல்லாது. பொருளாதாரம் என்று அழைக்கப்படுவதை விட இப்போது பொதுமக்களின் வாழ்க்கை முக்கியமானது என்று பலரும் கூறி இருக்கின்றனர்,