சென்னை; தமிழக பள்ளிகளில் நடப்பாண்டில் பொது காலாண்டு தேர்வு கிடையாது என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு தேதிகளில் காலாண்டு தேர்வை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால்,  இம்மாதம் 30ஆம் தேதியுடன் காலாண்டு தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

hool education

தமிழ்நாட்டில்  11 மற்றும் 12 ஆம் வகுப்பு காலாண்டு தேர்வுக்கான  அட்டவணையை கடந்த வாரம் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டது. அதன்படி,  11, 12 ஆம் வகுப்புகளுக்கு காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 22 முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தொடர்ந்து, மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் ஆயுத பூஜை விடுமுறை அக்டோபர் 1 முதல் 5 ஆம் தேதி வரை வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதற்கான விரிவான கால அட்டவணை மாவட்டம் வாரியாக பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில், 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு போலவே காலாண்டுத் தேர்வுகளையும் நடத்த வேண்டும். இதற்கான வினாத்தாள்கள் தேர்வுத் துறை மூலம் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கல்வித் துறை தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், தற்போது,  ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேரு தேதிகளில் காலாண்டு தேர்வை நடத்த பள்ளிக்கல்வி துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி தேர்வுகளை செப்டம்பர் 30க்குள்  முடித்துவிட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிகளில் வருடாவருடம் சரியாக சரஸ்வதி பூஜை, விஜயதசமி விடுமுறை தினங்களை கணக்கில் கொண்டு காலாண்டு தேர்வு தமிழகம் முழுவதும் பெரும்பாலும் ஒரே மாதியரியாக தான் நடைபெறும். ஆனால், திமுக அரசு, இந்த  கல்வியாண்டில், ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு தேதிகளில் காலாண்டு தேர்வை நடத்த உத்தரவிட்டு உள்ளது.

மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள் தயாரித்து நடத்திய தேர்வின் வினாத்தாள் லீக் ஆனதால் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. மேலும் தேர்வு தேதிகளை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களே முடிவு செய்து செப்டம்பர் இறுதிக்குள் தேர்வு நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.