சென்னை:

மிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகத்தில் ஜூன 1ந்தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கால்,  அம்மா உணவகங்களில், இனிமேல்  இட்லி ஒரு ரூபாய், தயிர் சாதம் 3 ரூபாய், சப்பாத்தி 3 ரூபாய், சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கு காசு கொடுத்துதான் வாங்கப்படும் நிலை ஏற்பட்டுஉள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், ஏழை எளிய மக்கள், கூலித் தொழிலாளர்கள் பசிக்கு உணவில்லாமல் அவதிப்பட்டனர். இதையடுத்து, அரசு நடத்தி வரும் அம்மா உணவகங்களில் அதிமுக மூலம் இலவச உணவு வழங்க ஏற்பாடு ச ய்யப்பட்டது.  அதன்படி, சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் 407 அம்மா உணவகங்களில் சில தன்னார்வலர்கள் உதவியுடன் விலையில்லா உணவு வழங்கப்பட்டு வந்தது.

தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, வேலைவாய்ப்புகள் மீண்டும் தொடங்கிய நிலையில், விலையில்லா உணவு நிறுத்தப்பட்டு உள்ளது.  அதன்படி மீண்டும் பழைய விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இட்லி ஒரு ரூபாய், தயிர் சாதம் 3 ரூபாய், சப்பாத்தி 3 ரூபாய், சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கு வழக்கம் போல விற்கப்படுகிறது.

சென்னையில் அம்மா உணவகம் மூலம் இதுவரை 6 கோடிக்கும் அதிகமாக உணவு விநியோகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.