கோவை:

மிழகம் முழுவதும் அம்மா உணவகத்தில் வழங்கப்பட்டு வந்த இலவச உணவு மே 31ந்தேதியுடன் நிறுத்தப்பட்டு, நேற்று (ஜூன் 1ந்தேதி) மூதல் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டதுபோல உணவுகள் விற்பனை நடைபெற்று  வருகிறது.

இந்த நிலையில், கோவையில் அம்மா உணவகத்தில் ஜூன்-30 வரை இலவச உணவு வழங்கும் வகையில் அமைச்சர் வேலுமணி ஏற்பாடு செய்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால்  ஏழை எளிய மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள  அம்மா உணவகங்களில் ஏழை மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டது. இந்த இலவச உணவு திட்டம் மே 31ந்தேதியுடன் நிறைவடைந்தது.

இந்த நிலையில்,   கோவை மாவட்டத்தில் ஜூன்-30ம் தேதி வரை அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  அதற்கான கட்டணம் ரூ..87 லட்சத்தை மாவட்ட   ஆட்சியர் ராஜாமணியிடம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கியுள்ளார்.