கொல்கத்தா: ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக இருந்த சீன நிறுவனமான ‘வீவோ’ இடைநீக்கம் செய்யப்பட்டதால், எந்தவித நிதி நெருக்கடியும் ஏற்படாது என்றுள்ளார் பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி.

கங்குலி கூறியுள்ளதாவது, “சீன நிறுவனம் இடைநீக்கம் செய்யப்பட்டதால், எவ்வித நிதி நெருக்கடியும் ஏற்படப் போவதில்லை. இதை சிறிய தடங்கலாக வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம்.

பிசிசிஐ அமைப்பிற்கென்று வலுவான அடித்தளம் உள்ளது. கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் என அனைவரும் ஒருங்கிணைந்து இந்த அமைப்பை பெரிதும் ஸ்திரப்படுத்தியுள்ளனர். எப்போதுமே ஒரு மாற்றுத் திட்டத்தை கையில் வைத்திருப்போம். எனவே, இந்த நெருக்கடியை எளிதாக சமாளிக்க முடியும்” என்றுள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக, இந்தியாவிலிருந்து அமீரக நாட்டிற்கு மாற்றப்பட்ட ஐபிஎல் தொடர், செப்டம்பர் மாதம் 19 முதல் நவம்பர் 10ம் தேதி வரை நடைபெறுகிறது.