டெல்லி:

பணமதிப்பிழப்பு அமலில் இருந்த காலத்தில் டொபசிட் செய்யப்பட்ட பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளில் கருப்பு பணம் எவ்வளவு என்பது கணக்கிப்படவில்லை என்று மத்திய அரசு லோக்சபாவில் தெரிவித்துள்ளது.

மத்திய நிதித்துறை இணை அமைச்சர் சந்தோஷ் கமார் கங்வர் லோக்சபாவில் தாக்கல் செய்த எழுத்துப்பூர்வ பதிலில் கூறியிருப்பதாவது:

கடந்த நவம்பர் 8ம் தேதி முதல் டிசம்பர் 30ம் தேதி வரை பணமதிப்பிழப்பு அமலில் இருந்த காலத்தில் 23.87 லட்சம் வங்கி கணக்குகளில் ரூ. 5 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு டெபாசிட் செய்யப்பட்டதில் பழைய ரூபாய் நோட்டுக்கள் எவ்வளவு, புதிய ரூபாய் நோட்டுக்கள் எவ்வளவு என்று தனித்தனியாக கணக்கு பராமரிக்கவில்லை. 4.62 லட்சம் கடன் கணக்குகளில் ரூ. 25 லட்சத்துக்கு மேல் டொபசிட் செய்யப்பட்டுள்ளது என்றார்.

‘‘வங்கி ஒழுங்குமுறை சட்டத்தின் படி இருப்பு நிலை குறிப்பு மற்றும் லாப நஷ்ட கணக்கு தயாரிக்க உத்தரவிடப்பட்டது. பண விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படவில்லை. அதேபோல் எந்த வங்கிக்கும் பணம் இல்லை என மறுப்பு தெரிவிக்கப்படவில்லை. கையிருப்பில் இருந்த பணம் தேவைக்கு ஏற்ப வழங்கப்பட்டது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது’’ என்றார் கங்வர்.

நடுத்தர, சிறுகுறு தொழில் நிறுவனங்களில் ஒரு முறை பட்டுவாடா குறித்த கேள்விக்கு அவர் பதில் கூறுகையில், ‘‘எஸ்.பி.ஐ இந்த திட்டத்தை அறிவித்துள்து. கடந்த 2016ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரையிலான செயல்படாத சொத்துக்கள் மீது நிலுவையில் உள்ள ரூ. 5 லட்சம் முதல் ரூ. 5 கோடி வரையிலான கடல் நிலுவை மற்றும் ரூ. 10 லட்சம் முதல் ரூ. 5 கோடி வரை தயாரிப்பு மற்றும் வர்த்தக மற்றும் சேவை நிறுவனங்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

இதற்காக எஸ்பிஐ 2 ஆயிரத்து 772 விண்ணப்பங்களை பெற்றுள்ள்ளது. இதில் 2 ஆயிரத்து 703 விண்ணப்பங்களுக்கு வங்கி அனுமதி வழங்கிவிட்டது’’என்று தெரிவித்தார்.