டில்லி:

பாஜக தேசிய செயற்குழு கூட்டம் டில்லி டல்கத்தாரோ ஸ்டேடியத்தில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் கல ந்துகொண்டவர்களுக்கு நுழைவு சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த நுழைவு சீட்டு சீனாவில் தயாரிக்கப்பட் டுள்ளது.

டோக்லாம் எல்லை பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தியா&சீனா இடையே கடும் மோதல் போக்கு உருவானது. இரு நாட்டு ராணுவ வீரர்களும் அங்கு குவிக்கப்பட்டதால் பெரும் பதற்றம் நிலவியது. பின்னர் படைகள் வாபஸ் பெறப்பட்டன.

அதோடு சீனாவில் தயாரான பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்று ஆர்எஸ்எஸ், பாஜக.வினர் பல முறை வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக இந்திய தயாரிப்பு பொருட்களை அதிகப்படுத்தும் வகையில் 2014ம் ஆண்டு ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

கார்பரேட் நிறுவனங்கள் இந்தியாவில் பொருட்கள் தயாரிக்க வேண்டும் என்று ஊக்கப்படுத்தி வருகிறார். இ ந்நிலையில் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் இந்திய தயாரிப்புகள் புறக்கணிக்கப்பட்டு சீனாவில் தயாரான நுழைவு சீட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தகவல் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியாகியுள்ளது. மேலும், இந்த நுழைவு சீட்டில் ஆங்கிலமும், சீன மொழியும் இடம்பெற்றுள்ளது. தேசிய மொழி என்று பாஜக.வினர் கூறி வரும் இந்தி மொழி இதில் இடம்பெறவில்லை. அந்த நுழைவு சீட்டில் ‘மேட் இன் சீனா’ லோகோ இடம்பெற்றுள்ளது.