நெட்டிசன்:
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநுல் பதிவு
அக்ஷய திருதியை வியாபாரத்திற்கும் தமிழக அரசுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை..
மங்களகரமான நாட்களில் பத்திரப் பதிவுக்கு கூடுதல் கட்டணம்..
மிக நுட்பமாக தமிழ்நாட்டில் இந்துக்களின் அதீத நம்பிக்கையை காசாக்க முனைகிறது தமிழக அரசு.
அரசு விடுமுறை தினங்களில் வரும் மங்களகரமான நாட்களை இதற்காக திட்டமிட்டு தேர்ந்தெடுக்கிறது. கொஞ்சம் அலசினால் அப்படித்தான் தோன்றுகிறது.
அரசு விடுமுறை இல்லாத மங்களகரமான நாட்கள் என்றால், நாங்கள் அதற்கு கூடுதலாக கட்டணம் அழவேண்டும் என்று இறை நம்பிக்கை இல்லாதவர்களும் மற்ற மதத்தினரும் கேள்வி கேட்பார்கள். கோர்ட்டுக்கும் செல்வார்கள்..
அதனால்தான், “ஆர்வமுள்ள இந்துக்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில், விடுமுறை நாட்களில் அவர்களுக்காக அரசு அலுவலகங்களை திறந்து பத்திரப்பதிவு செய்கிறோம். அதற்காகத்தான் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறோம்” என்று சொல்கிறது அரசு..
அரசின் இந்த அற்புத நடவடிக்கைகளைப் பார்க்கும்போது இன்னும் நிறைய நான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று தோன்றுகிறது..