டெல்லி: நாட்டின் மிகப்பெரிய அரசியல் கட்சியான காங்கிரஸின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது “ஒரு குடும்பத்தின் வங்கி கணக்கு முடக்கப்பட்டால், அந்த குடும்பம் பஞ்சத்தால் பாதிக்கப்படும், அந்த நிலை தான் காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ளதாகவும், இது இது ஜனநாயத்தின் மீதான தாக்குதல் என்றும்   ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்தார்.

இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் இளைஞர் காங்கிரஸ் என காங்கிரஸ் கட்சியின் 4 வங்கி கணக்குகள் வருமான வரித்துறையினரால் முடக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக வருமான வரித்துறை தெரிவித்துள்ள விளக்கத்தில்,  2018-19-ம் நிதியாண்டுக்கான கணக்கை 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததால் வங்கிக் கணக்குகளை முடக்கியத்துடன் ரூ.210 கோடி அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது.

இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  பொதுமக்கள் நன்கொடை அளிக்கும் வகையில் உள்ள எங்களின் கிரவுட் ஃபண்டிங் வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. இந்த முடக்கத்தால் எங்களால் பணத்தை எடுக்க முடியாது. இது வெறும் வங்கிக் கணக்கு முடக்கமல்ல, ஜனநாயகம் முடக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியாகும் நிலையில், எதிர்க்கட்சிகளின் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பது ஜனநாயகத்தை முடக்குவதற்கு சமம்” என்று அவர் குற்றம் சாட்டிய காங்கிரஸ் மூத்த தலைவரும், பொருளாளருமான அஜய் மக்கான், தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்த மறுநாள் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக  குற்றம் சுமத்தியுள்ளார்.  மேலும்,  வங்கிக் கணக்குகள் முடக்கம் தொடர்பாக வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தை காங்கிரஸ் கட்சி அணுகியுள்ளது.

இந்த நிலையில், இன்று டெல்லியில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த  அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்பட கட்சியின் மூத்த நிர்வாகிகள், கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது ஜனநாயக விரோதம் என்று குற்றம் சாட்டினர்.

செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, நாங்கள் அசுர சக்திக்கு எதிராக போராடுகிறோம் என்றவர்,   ”வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. எங்களால் எங்களின் வேட்பாளர்களை ஆதரிக்க முடியவில்லை” என்றவர், ஒரு குடும்பத்தின் வங்கி கணக்கு முடக்கப்பட்டால், அந்த குடும்பம் பஞ்சத்தால் பாதிக்கப்படும், அந்த நிலை தான்  தற்போது  காங்கிரசுக்கு ஏற்பட்டிருப்பதாக கூறியவர், வேட்பாளர்களுக்கு பணம் கொடுக்கவும், விளம்பரம் செய்யவும் கூட எங்களிடம் பணம் இல்லை ஜனநாயகத்தை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்

முதன்மை எதிர்க்கட்சியான காங்கிரஸின் நிதியை முடக்கியது நன்கு திட்டமிடப்பட்ட தாக்குதல் பொருளாதார ரீதியாக காங்கிரஸ் கட்சியை ஒடுக்க நினைக்கிறார்கள் என கடுமையாக விமர்சித்தவர்,  காங்கிரஸ் கட்சியின் மீதான கிரிமினல் நடவடிக்கை. பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி ஆகியோரால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்பது பொய். இது முற்றிலும் பொய். இன்றைய இந்தியாவில் ஜனநாயகம் என்பது இல்லை. இந்தியாவில் 20 சதவீத வாக்குகள் உள்ளன. ஆனால், எதற்கும் 2 ரூபாய் கூட கொடுக்க முடியவில்லை. தேர்தலில் எங்களை முடக்க திட்டமிட்டுள்ளனர். இன்று எங்களுடைய வங்கி கணக்குள் முடக்கப்படவில்லை என்றாலும் கூடு, இந்திய ஜனநாயகத்திற்கு அதிகப்படியான தொகையான கடன் சேதம் ஏற்பட்டுள்ளது. இது காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் அல்ல. இது இந்திய ஜனநாயத்தின் முடக்கம்.

மிகப்பெரிய எதிர்க்கட்சியான நாங்கள் என நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. நாங்கள் விளம்பரம் பதிவு செய்ய முடியவில்லை. எங்களது தலைவர்களை எங்கும் அனுப்ப முடியவில்லை. இது ஜனநாயத்தின் மீதான தாக்குதல் என கடுமையாக விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேர்தல் நேர்மையாக நடப்பதை உறுதி செய்வதுதான் ஜனநாயகத்தின் விழுமியம் – ஆனால், அதற்காக மாறாக நடைபெற்று வருகிறது என குற்றம் சாட்டினார்.